Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது

RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !

Posted on May 24, 2022 By admin

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்கும்
போனி கபூர் வழங்கும்

நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (மே 25, 2022) வெளியாக உள்ளது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது. பிளாக்பஸ்டர் இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை நாளை (மே 25, 2022) வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

படம் குறித்து RJ.பாலாஜி கூறுகையில்..,
Zee Studios & Romeo Pictures நிறுவனங்களுடன் இணைந்து போனி கபூர் சாரின் BayView Projects போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு ஸ்டுடியோக்கள் தயாரிக்கும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ரசிக்க ஒரு நேர்த்தியான பொழுதுபோக்கிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பப் பார்வையாளர்களுக்காக, ஒரு அருமையான படைப்பாக இத்திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் இறுதிப்பதிப்பை பார்த்த தயாரிப்பாளர்கள் அசல் பதிப்பை விட (பதாய் ஹோ) “வீட்ல விசேஷம்” படம் நன்றாக இருப்பதாக பாராட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை நடைபெறும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டியின் போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும். இந்த வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக சத்யராஜ் சார் மற்றும் அபர்ணா பாலமுரளி என்னுடன் மும்பையில் இருக்கிறார்கள். நாளை டிரெய்லரையும் ஜூன் 17, 2022 அன்று முழு நீள திரைப்படத்தையும் உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

தொழில்நுட்பக் குழுவில் கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), RJ.பாலாஜி (வசனம்), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வா RK (எடிட்டிங்), கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் (கதை) திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ) (விஷிவல் எபெக்ட்ஸ்), நந்தினி கார்க்கி (வசனங்கள்), ராஜராஜன் கோபால் (DI வண்ணக்கலைஞர்) ), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), M செல்வராஜ் (காஸ்ட்யூமர்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), S.பாண்டியன் (முடி அலங்காரம்), N.சக்திவேல் (மேக்கப்), P.செல்வகுமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு).

Romeo Pictures ராகுலுடன் இணைந்து Zee Studios & BayView Projects தயாரித்த உதயநிதி ஸ்டாலின் நடித்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை பெறதுடன், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:“வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது !, RJ பாலாஜி நடிக்கும்

Post navigation

Previous Post: Zee Studios & BayView Projects in Association with Romeo Pictures Boney Kapoor presents
Next Post: டாப்கன் மேவ்ரிக் திரைவிமர்சனம்

Related Posts

Director Adhik Ravichandran on Bagheera Director Adhik Ravichandran on Bagheera Cinema News
25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம் 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’ Cinema News
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் குறித்து ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ். Cinema News
வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் - தொல் திருமாவளவன்! வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் – தொல் திருமாவளவன்! Cinema News
*Prime Video launches music album with soul-stirring compositions by Maestro Ilaiyaraaja, Yuvan Shankar Raja, G. V. Prakash Kumar and Sean Roldan – Together for the first time ever for Amazon Original Series Modern Love Chennai* Cinema News
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் ! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் ! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme