Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது!

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது!

Posted on May 24, 2022 By admin

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிக்ரகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அக்கதாப்பாத்திரமாக மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விகரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Cinema News Tags:விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது!

Post navigation

Previous Post: Vikram Prabhu starrer “Rathamum Sadhaiyum” (Blood & Flesh) First Look revealed
Next Post: Nakshatra Villas at Thiruporur by Roofvest

Related Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கெட்டப் கசிந்தது Cinema News
ஜிப்ஸி படத்தின் இசை வெளியீடு நிகச்சியில் பேசிய நடிகர் ஜீவா Cinema News
காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’ Cinema News
கன்னி மாடம் படத்தின் சிறப்பு Cinema News
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ Cinema News
Nenjukku Needhi Success Meet நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் ! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme