Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மே-27ல் வெளியாகும் விஷமக்காரன்

மனைவி-காதலிக்கு இடையே மாட்டிக்கொண்ட ‘விஷமக்காரன்’ மே-27ல் வெளியாகிறது

Posted on May 24, 2022 By admin

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார்.

ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம். ஆச்சர்யமாக இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் V.

சொல்லப்போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செய்வதற்காக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றுகூட சொல்லலாம்.. அதுமட்டுமல்ல. இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்கவும் முடிவு செய்தனர்.

அந்தவகையில் கடந்த மாதம் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் முன்னிலையில் இந்த சாப்ட்வேர் வெளியிடப்பட்டது. திரைப்பட உருவாக்கத்திற்கு இப்படி ஒரு சாப்ட்வேரா என ஆச்சர்யப்பட்ட பிரபலங்கள் தாங்களும் இதை பயன்படுத்தி பார்ப்பதாக படக்குழுவினரை உற்சாகமூட்டினார்கள்.

மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு : J கல்யாண்
இசை : கவின்-ஆதித்யா
படத்தொகுப்பு : S.மணிக்குமரன்
இயக்கம் : V
தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்
மக்கள் தொடர்பு : KSK செல்வா

Cinema News Tags:அனிகா விக்ரமன் - சைத்ரா ரெட்டி - வி ஆகியோர் நடித்திருக்கும் விஷமக்காரன்' மே-27ல் வெளியாகிறது, மனைவி-காதலிக்கு இடையே மாட்டிக்கொண்ட 'விஷமக்காரன்' மே-27ல் வெளியாகிறது, மே-27ல் வெளியாகும் விஷமக்காரன்

Post navigation

Previous Post: Top Gun Maverick மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது
Next Post: Vikram Prabhu starrer “Rathamum Sadhaiyum” (Blood & Flesh) First Look revealed

Related Posts

Prasanth Varma’s HANU-MAN To Have Pan World Release On May 12, 2023 Prasanth Varma’s HANU-MAN To Have Pan World Release On May 12, 2023 Cinema News
டகால்டி படத்தில் மூன்று வேடங்களில் சந்தானம் Cinema News
வாய்தா இசை வெளியீடு வாய்தா பட இசை வெளியீயிட்ட விழா Cinema News
'Kadaisi Vivasayi', which was celebrated by both the people and the critics alike, has won two National Awards at the 69th National Film Awards 2023. ‘Kadaisi Vivasayi’, which was celebrated by both the people and the critics alike, has won two National Awards at the 69th National Film Awards 2023. Cinema News
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை ‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை. Cinema News
Ram Pothineni-Kriti Shetty starrer ‘Warriorr’ Pre-Release Event Ram Pothineni-Kriti Shetty starrer ‘Warriorr’ Pre-Release Event Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme