Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Ranina Reddy turns to an Independent Music Artist with a beautiful song "Mannipu"

மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

Posted on May 23, 2022 By admin

‘
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இயற்கை அன்னையின் அழகை அங்கீகரித்து ‘மன்னிப்பு’ என்ற அழகிய சுயாதீன ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து ரனினா கூறுகையில்

“இந்தப் பாடலை 16 வயதில் இசையமைத்தேன் மற்றும் இந்த பாடல் எனது ஆத்மாவின் ஆழத்தில் இருந்து உருவானது. பெல்காமில் வேறு பாடலுக்கு இசையமைக்கும் போது இந்த அற்புதம் நடந்தது. அந்தி நேரத்தில் நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தேன். நான் நிலாவை பார்த்து எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தினேன், கடவுளுக்கு எனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினேன். ஒளி போன்ற அத்தியாவசியமான ஒன்றை இயற்கை நமக்கு எவ்வாறு ஆசீர்வதித்துள்ளது என்பதை நான் உணர்ந்தேன். நாம் நமது ஆசீர்வாதங்களை எண்ணி இன்புறுவதை விட எப்போதும் புகார் செய்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்சம், கிரகம் மற்றும் அண்டவெளி பற்றி எனக்குள் ஏதோ உத்வேகம் உருவாகி, இந்தப் பாடலை இயற்றினேன். ‘இயற்கை’யை மனித இயல்பின் சாரத்துடன் கலந்து ஒரு பாடலை உருவாக்க விரும்பினேன். ஆனால் அந்தக் கால கட்டத்தில் அப்படிப்பட்ட பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அந்தக் காலங்களில், பெப்பி மற்றும் வணிகப் பாடல்கள் விற்பனைக்குக் காரணமான முக்கிய காரணிகளாக இருந்ததால், இத்தகைய பாடல்களுக்கான பாராட்டுக்கள் குறைவாகவே இருந்தன. இப்போது ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு சுயாதீன கலைஞராக இருக்க விரும்பினேன், கடவுளின் கிருபை, மெல்போர்ன்-ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட KK Records ராஜா மற்றும் கிஷோர் உடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆல்பம் மூலமாக எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொழில்துறையில் உள்ள பிரபலங்களின் ஈடுபாட்டாலும் ஆர்வத்தாலும் இந்த பாடலைப் பாடமாக்க முடிந்தது. மனித மனதை குணப்படுத்தும் கூறுகள் கொண்ட எனது இசையைக் கேட்ட பிறகு, என்னிடம் வேறு ஏதேனும் பாடல்கள் உள்ளதா என்று கேட்டார்கள். அந்த நேரத்தில், நான் வேறு பாடலின் இசையமைப்பில் வேலை செய்து கொண்டிருந்தேன், அவர்களுக்கு எனது பாடல் பிடித்திருந்தது. இந்தப் பாடலை, தமிழில் மட்டும் வெளியிட்டு குறுக்காமல், இந்தியா முழுவதும் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம், எனவே, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தப் பாடலைப் பற்றிய எனது எண்ணத்தை தெரிவிக்க, மதன் கார்க்கியை அணுகினேன். அவர் மிகவும் இனிமையாகவும், எனக்கு பெரும் ஆதரவாகவும் இருந்தார், ஒரு வார கால இடைவெளியில் ஆத்மார்த்தமான பாடல் வரிகளைக் கொடுத்தார். அவருடைய பாடல் வரிகளைப் படிக்கும் போது என் கண்கள் ஈரமாகி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. இயற்கை அன்னையைப் பற்றி அவருடைய உணர்ச்சிகளைக் கொட்டச் சொன்னேன், அவன் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தினார். தெலுங்கு பதிப்பை ராகேந்து மௌலி-ராம்பாபு கோசாலா எழுதியுள்ளனர், இந்தி பாடல் வரிகளை சமீர் சதிஜா மற்றும் ரித்விகா எழுதியுள்ளனர்.

ரனினா ரெட்டி மற்றும் குழந்தைக் கலைஞர் ஷிவானி ஹரிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் பாடலை திம்மப்பா கொல்லர் இயக்கியுள்ளார். KK Records (ஆஸ்திரேலியா) நிறுவனம் இந்த பாடலை தயாரித்துள்ளனர்.

Thanks & Regards
Suresh Chandra

Cinema News Tags:சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !, மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம்

Post navigation

Previous Post: Ranina Reddy turns to an Independent Music Artist with a beautiful song “Mannipu”
Next Post: Actor Arulnithi and filmmaker Ajay Gnanamuthu collaborate for the ‘Demonte Colony’ Franchise with part 2

Related Posts

சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது Cinema News
Phoenix Marketcity to witness the live in concert of Havoc Brothers Soothing hip – hop & rap love songs by Havoc Mathan and Havoc Naven Cinema News
பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா - அபர்ணா பாலமுரளி பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது. Cinema News
RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE IN TAMIL ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது Cinema News
*On the auspicious occasion of Ram Navami, makers launch the divine poster of Adipurush* Cinema News
Ranbir Kapoor, Sandeep Reddy Vanga, Bhushan Kumar, Pranay Reddy Vanga, T Series, Bhadrakali Pictures Animal First Look Unveiled Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme