Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Demonte Colony Part 2

நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும், ‘டிமான்டி காலனி’ இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர் !

Posted on May 23, 2022 By admin

நடிகர் அருள்நிதி & இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015) படத்தினை வழங்கினர், தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம் வெளிவந்து 7வது ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.

நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். தனித்துவமான திரைக்கதைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற ‘முதல் இலக்கு’ என்று அவரைப் பாராட்டுவதுடன், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பார்வையாளர் அருள்நிதியை ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றுகிறார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது. டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இப்போது இருவரும் ‘டிமான்டி காலனி 2’ மூலம் அந்த மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்க மீண்டும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நேரங்களில், திரைப்படத் துறையில் பெரும்பாலான இரண்டாம் பாகங்கள் இயக்குனர்-நடிகர் என இருவரின் முன்முயற்சியால் நிகழ்கின்றன. இருப்பினும், டிமான்டி காலனி திரைப்படத்தில் வினோதமாக, முதல் பாகத்தில் அது உருவாக்கிய மாயாஜாலத்தின் தொடர்ச்சியை வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் மீண்டும் பார்க்க விரும்புகின்றனர். படம் வெளியாகி (#7yrsOfDemonteColony) ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அருள்நிதி-அஜய் ஞானமுத்து ஜோடி, படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டே காலனி 2 ’யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது…

“டிமான்டி காலனி திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று மற்றும் படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இதயத்திற்கு நெருக்கமானது. பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தின், கருத்து மற்றும் பதில் முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் ‘டிமான்டி காலனி 2’ பற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளும் திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின. அருள்நிதி சாரை அணுகியபோது, அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். திதைத்துறையில் அவரது வளர்ச்சி இப்போது அதிகரித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்த படத்தில் அவர் இருப்பது ஒரு ரசிகர் கூட்டத்தை இழுக்கும் முக்கிய காரணியாக இருக்கும். என்னை நம்பி எனது இயக்குனர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனிப்பட்ட முறையில், ‘The Friday The 13th’, ‘Halloween’ to the contemporary ‘The Conjuring Universe’ என்ற ஹாலிவுட் படங்களின் தொடர் வரிசை என்னை எப்பொழுதும் ஈர்க்கும் ஒன்றாக இருந்தது. தெளிவான உத்வேகத்துடன், டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 இன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது, முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதன்படி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம். “ என்றார்.

Cinema News Tags:‘டிமான்டி காலனி’ இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ளனர் !, நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும்

Post navigation

Previous Post: Actor Arulnithi and filmmaker Ajay Gnanamuthu collaborate for the ‘Demonte Colony’ Franchise with part 2
Next Post: Filmmaker K.S. Ravikumar’s daughter Maalica Ravikumar launches Life Coaching Company for women

Related Posts

Brinda Master to Direct - THUGS Brinda Master to Direct – THUGS Cinema News
ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது! ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது! Cinema News
திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது ! திரைப்படைப்பாளி ஹலிதா ஷமீம் இயக்கத்தில் “மின்மினி” படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது ! Cinema News
வாஸ்கோடகாமா’ திரைப்படம் வாஸ்கோடகாமா திரைப்படம் இனிதே பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு Cinema News
சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) Cinema News
சித்தார்த் நடிப்பில் “அருவம்” சித்தார்த் நடிப்பில் “அருவம்” Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme