Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Herewith i forward the press release pertaining to "NTR 31"

NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

Posted on May 21, 2022 By admin

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீனியர் NTR

RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

ஏப்ரல் 2023-ல் இதன் படபிடிப்பு துவங்கும்,

RRR மற்றும் KGF அத்தியாயம் 2 ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரு முக்கிய தூண்களான, ஜூனியர் NTR மற்றும் பிரசாந்த் நீல், ஆகியோர் Mythri Movie Makers & NTR Arts தயாரிக்கும் NTR31 இல் இணைந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இரத்தத்தில் நனைந்த மண் மட்டுமே நினைவில் கொள்ளத்தக்கது!!!

அவனது மண்….. அவனது ஆட்சி
ஆனால் சிந்தியது அவனுடைய இரத்தம் அல்ல….

திரைப்பட ஆர்வலர்கள் முதல் திரைப்பட விமர்சகர்கள் வரை, உலகெங்கிலும் உள்ள மக்கள் RRR மற்றும் KGF படத்தின் மீது தொடர்ந்து பாராட்டுக்களையும் அன்பையும் பொழிந்து வருகின்றனர். இரண்டு படங்களும் ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளன. பார்வையாளர்கள் இப்போது NTR31 இல் அவர்களது கவனத்தை குவித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை, மேலும் இப்படம் வெளியாவதற்காக இப்பொழுதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

என்டிஆர் மாஸ் நிறைந்த நாயகனாகவும், பிரசாந்த் நீல் மாஸ் நிறைந்த இயக்குனராகவும் வலம் வருகின்றனர். இந்த டைனமிக் ஜோடி என்டிஆர் 31-யை மிகவும் பரபரப்பான பான்-இந்தியா படங்களில் ஒன்றாக ஆக்குகிறது.

இந்த மாபெரும் படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், “இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய ஒரு யோசனை, ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரமாண்டம் என்னைத் தடுத்து நிறுத்தியது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை எனது கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் இன்று அமைந்துள்ளது.” என்றார்.

Mythri Movie Makers & NTR Arts தயாரிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகும் NTR31 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 2023-ல் துவங்குகிறது.

Thanks & Regards
Suresh Chandra

Cinema News Tags:NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

Post navigation

Previous Post: Herewith i forward the press release pertaining to “NTR 31”
Next Post: Herewith i forward the press release pertaining to “Romeo Pictures Producer Raahul – Nenjuku Needhi “

Related Posts

கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர் கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர் Cinema News
ஹாலிவுட் பாணியில் தமிழில் ஒரு ஹெய்ஸ்ட் திரில்லர், வெளியானது ஆதாரம் படத்தின் அதிரடி டீசர் !! Cinema News
bigg-boss-Cheran_indiastarsnow.com பிக்பாஸ் வீட்டில் சேரனை கண்டித்த மகன்!!! Cinema News
Vels University (VISTAS) offers various scholarships schemes Vels University (VISTAS) offers various scholarships schemes Cinema News
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் நடிகை Cinema News
Acclaimed Movie Producer S. Sashikanth of YNOT Studios Makes Directorial Debut Acclaimed Movie Producer S. Sashikanth of YNOT Studios Makes Directorial Debut Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme