Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

NTR 30 Team unleashed a massive Motion Poster

என் டி ஆர் 30 திரைப்பட படக்குழு மிகப்பிரமாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது !

Posted on May 21, 2022 By admin

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான என்.டி.ஆர்.30 படத்தில், இயக்குநர் கொரட்டாலா சிவா “ஜனதா கேரேஜ் (2016)” படத்துக்குப் பிறகு என்.டி.ஆர். தாரக்குடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். RRR படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அனைவரது பார்வையும் என்.டி.ஆர் – கொரட்டாலா சிவா படத்தின் மீதுதான் உள்ளது. “இது ஒரு உணர்ச்சிகரமான கதைகளத்துடன், மிகவும் சக்திவாய்ந்த திரைக்கதை கொண்டது” என்று இயக்குனர் கொரட்டாலா சிவா ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.

கொரட்டாலா சிவா, ஜூனியர் என்டிஆரின் என்டிஆர் 30க்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். என்டிஆர் நடித்த படத்தை லைம்லைட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதால், படத்தின் எந்த ஒரு அம்சத்தையும் அவர் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்டிஆர் பிறந்தநாளில் என்டிஆர் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும் என்று சமீபத்தில் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்தார். ரசிகர்களின் கொண்டாட்ட பெருநாள் இன்று விடிகிறது, சமூக ஊடகங்களில் ரசிகர்களின் வெறித்தனம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.

ரசிகர்களின் ஆவலை கூட்ட, என்டிஆர் 30இன், தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டரில் என் டி ஆர் கர்ஜனை குரலில் மாஸ் டயலாக்கை பேச, அனிருத் தனது நரம்பு துடிக்கும் பின்னணி இசையில் அதிரவைக்கிறார். எமோஷனுக்கான வசனங்களை உச்சரிப்பதில் என்.டி.ஆர் சிறந்து விளங்குபவர் என்பது அனைவரும் அறிந்ததே. என்டிஆர் 30 படத்தின் கதைக்கருவை சித்தரிக்க, கொரட்டாலா சிவா என்டிஆர் குரலை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஒளிப்பதிவாளராக R.ரத்னவேலு ISC ஆகியோரின் கூட்டணியில் இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமானதாக மாறியுள்ளது. புகழ்மிகு கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் உள்ளனர்.

கொரட்டாலா சிவா மற்றும் என்டிஆர் கூட்டணி இணைந்து முன்பு ‘ஜனதா கேரேஜ்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை தந்தனர். அப்படம் ஒரு சக்திவாய்ந்த சமூக கருத்துடன் வெகுஜன ஆக்சன் கமர்ஷியலை வழங்கியது. இந்த முறையும், இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தை தருவது உறுதி.

இப்படத்தை NTR Arts, நிறுவனம் சார்புல் நந்தமுரி கல்யாண் ராம் வழங்க, Yuvasudha Arts சார்பில் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரிகிருஷ்ணா K தயாரிக்கின்றனர்.

Cinema News Tags:என் டி ஆர் 30 திரைப்பட படக்குழு மிகப்பிரமாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது !

Post navigation

Previous Post: NTR 30 Team unleashed a massive Motion Poster
Next Post: Herewith i forward the press release pertaining to “NTR 31”

Related Posts

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர் ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர் Cinema News
ஒலிம்பி க் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது எனது இலக்கு பி.வி.சிந்து சென்னையில் பேட்டி ஒலிம்பி க் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது எனது இலக்கு பி.வி.சிந்து சென்னையில் பேட்டி Cinema News
American Superstar Arnold Schwarzenegger Terminator: Dark Fate Film on 1st November 2019 in 6 langauges World Wide release American Superstar Arnold Schwarzenegger Terminator: Dark Fate Film on 1st November 2019 in 6 langauges World Wide release Cinema News
First Look of Neha Sshetty from Kartikeya's 'Bedurulanka 2012' out on her birthday! First Look of Neha Sshetty from Kartikeya’s ‘Bedurulanka 2012’ out on her birthday! Cinema News
என் தந்தை தான் எனக்கு ஹீரோ - துல்கர் சல்மான் ‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. – துல்கர் சல்மான் Cinema News
புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme