Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இன்றைக்கு மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்து. உள்ள நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில், பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures ராகுல் !

இன்றைக்கு மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்து. உள்ள நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில், பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures ராகுல் !

Posted on May 21, 2022 By admin

திரைத்துறையில் மிகச் சில படங்களே ஒரே நேரத்தில் சிறப்பான தொடக்கத்தையும், நேர்மறையான விமர்சனங்களையும் பெறும் திறன் பெற்றிருக்கும். அத்தகைய திரைப்படங்கள் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் விருப்பமாக மாறும். உதயநிதி ஸ்டாலின் நடித்த “நெஞ்சுக்கு நீதி” படம் முதல் நாளிலேயே ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நெஞ்சுக்கு நீதி படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures தயாரிப்பாளர் ராகுல், மேலும் இத்திரைப்படத்தை ஒரு அற்புதமான படைப்பாக மாற்றியதற்காக முழு குழுவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து Romeo Pictures தயாரிப்பாளர் ராகுல் கூறியதாவது…

நெஞ்சுக்கு நீதி நேர்மறையான
விமர்சனங்களுடன் பார்வையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் நல்ல ஓப்பனிங் கொண்ட திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெறாமல் போகலாம் என்ற அனுமானம் எப்போதும் உண்டு, ஆனால் இந்த திரைப்படம் அவற்றை தவறென நிரூபித்துள்ளது. சிறப்பு திரையிடல்கள் ரசிகர்கள் ஆரவாரங்களால் கொண்டாடப்பட்டது. மேலும் பார்வையாளர்கள் மாநிலம் முழுவதும் நேர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். படம் திரையரங்குகளில் (தமிழகம் முழுவதும் 247 திரைகளில்) பெரும் வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சிறப்புமிகு திரைப்படத்தில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக போனி கபூர் சார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் அவர்களுக்கு நன்றி. தனது இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பால் பொதுமக்களின் மனதை கவரும் மாயாஜாலத்தை தொடரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றிகள். அநீதியை சகிக்காத மனிதனாக சமுதாயத்தில் வளர்ந்து வரும் அவருக்கு இத்திரைப்படம் ஒரு சான்றாக நிற்கிறது. ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திரக் குழுவின் தீவிர முயற்சிகளை பார்வையாளர்கள் கவனித்து அவர்களைப் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தத் திரைப்படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர், மேலும் திரைப்படத்தின் தரத்தை அதிகரிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு சிறந்த பலனைத் தந்துள்ளது. தமிழரசன் பச்சமுத்துவின் வலிமையான வசனங்கள் திரையரங்குகளில் பெருத்த கைதட்டலை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்காக இவ்வளவு அற்புதமான அர்ப்பணிப்புக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மொத்தக்குழுவின் கேப்டன் அருண்ராஜா காமராஜின் அற்புதமான படைப்பு. அவர் தனது தனித்த திறமையால் அற்புதமான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் வளர்த்த விதம் அற்புதமானது. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் Romeo Pictures எதிர்காலத்தில் மதிப்புமிக்க தரமான தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கி, தயாரித்து வழங்கும் என்றார்.

Cinema News Tags:இன்றைக்கு மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்து. உள்ள நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரவேற்பில், பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் Romeo Pictures ராகுல் !

Post navigation

Previous Post: Herewith i forward the press release pertaining to “Romeo Pictures Producer Raahul – Nenjuku Needhi “
Next Post: Vijay Sethupathi-Soori starrer Filmmaker Vetrimaaran’s Viduthalai

Related Posts

நடிகை அசின்மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார் நடிகை அசின் மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார் Cinema News
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகும் ‘மாணிக்’* Cinema News
ராஜ்கிரண் அளித்துள்ள விளக்கம் திரையுலகினரை அதிரவைத்துள்ளது. நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகரை காதல் திருமணம்அதிரவைத்துள்ளது. Cinema News
கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைநடிகை அலியாபட் மகிழ்ச்சி கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைநடிகை அலியாபட் மகிழ்ச்சி Cinema News
இளம் நாயகன் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் ‘பொண்ணு மாப்பிள்ளை’ படம் இளம் நாயகன் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் ‘பொண்ணு மாப்பிள்ளை’ படம் Cinema News
பொள்ளாச்சி என்னாச்சு? திரைப்பட விழாவில் இயக்குநர் பேரரசு கேள்வி பொள்ளாச்சி என்னாச்சு? திரைப்பட விழாவில் இயக்குநர் பேரரசு கேள்வி Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme