Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted on May 19, 2022 By admin

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.

மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.

பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனம் ‘: an every frame matters production

தயாரிப்பு : விஜயலட்சுமி நாராயணன்

எழுத்து, இயக்கம்: சஞ்சய் நாராயண்

ஒளிப்பதிவு: நாய்துப் டோர்ஜி

இசை :ஹ்ரிதிக் சக்திவேல்

எடிட்டர் : சஞ்சய்

கலை இயக்குநர் : ஜெனித் பிரபாகர்

மக்கள் தொடர்பு : யுவராஜ் & முத்துராமலிங்கம்.

Cinema News Tags:’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Post navigation

Previous Post: Selvaraghavan and Keerthy Suresh Talk About The Success Of Saani Kaayidham
Next Post: SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology

Related Posts

Samantha’s Edge-of-the-seat Action Thriller ‘Yashoda’ gets censored!! சமந்தாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது! Cinema News
Vikranth, Mehreen Pirzada, Rukshar Dhillon’s Big Budget Psychological Action Thriller ‘Spark L.I.F.E’ releasing Pan India wide on November 17th Cinema News
விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு!-indiastarnsow.com விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு! Cinema News
சூரரைப்போற்று’ படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்-www.indiastarsnow.com சூரரைப்போற்று படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் Cinema News
DBL - இறகுப்பந்து போட்டி DBL – இறகுப்பந்து போட்டி Cinema News
Ananya Birla - Live 2019 - Chennai Ananya Birla is performing Live in Chennai Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme