சிபி சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு சில நேரங்களில் தன்னை அறியாமலேயே அவருடைய வலது கை அவரது பேச்சை கேட்காமல் செயல்படும். அவருடைய வலது கையில் ஸ்மைலி பால் இருந்தால் மட்டுமே அந்த கை அவரது மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் சிபி சத்யராஜ் பணிபுரியும் அலுவலகத்திற்கு நிகிலா பணிக்கு சேருகிறார்.
நிகிலா தனது சிறுவயது தோழியான தெரிந்த பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கு செல்கின்றனர். அங்கு உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரகசிய கேமராக்களை வைத்து அந்தரங்க விஷயங்களை படம் எடுப்பதை சிபிராஜ் கண்டுபிடிக்கிறார். இதனால் வில்லனுக்கும் சிபிராஜுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் வில்லன் கூட்டத்திடம் சிக்கிய பிறகு பயந்து ஓடும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நடித்துள்ளார். கையின் போக்கைக் கட்டுப்படுத்தவியலாமல் தடுமாறுகிற காட்சிகளில் அவர் காட்டும் முகபாவங்கள் இரசிக்கவைக்கின்றன. நிகிலாவிமல் அமைந்திருக்கிறார். காதல், பாசம், கோபம், சோகம்,பயம் ஆகிய அனைத்தையும் கண்கள் மூலமே வெளிப்படுத்தி கவர்கிறார்.
சதீஷ், சாரா, ரேணுகா, மனோபாலா, சாமிநாதன் ஆகியோர் சிரிக்க வைக்கப் பயன்பட்டிருக்கிறார்கள்.மோனிஷ்ரகேஜா எனும் புதியவர் வில்லனாக வருகிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.அர்வியின் ஒளிப்பதிவு காஷ்மீரின் கண்கொள்ளா அழகையும் அதிலே உள்ள ஆபத்துகளையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது