Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Jurassic World Dominion

ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது

Posted on May 14, 2022 By admin

ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது. ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படதிற்கான முன்பதிவு, இந்தியாவின் ஒரு சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது. !

ரசிகர்கள் உற்சாகத்தை கூட்டவும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்க்கவும் வந்து விட்டது. ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன், ஜுராசிக் வேர்ல்ட் படத்தொடரின் இறுதி பாகமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய திரையில் இந்த காவிய அனுபவத்தை ரசிகர்கள் ரசிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதை அறிந்ததும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவு வானளாவ உயர்ந்துள்ளது. ஜூன் 10ஆம் தேதி கிறிஸ் பிராட் நடித்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் நாளுக்காக, நாட்களை எண்ணிக்கொண்டிக்கின்றனர் . படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது.

ஜுராசிக் பார்க் படத்தொடரின் இறுதிப்பதிப்பாக உருவாகியுள்ள இப்படத்திற்கு 60 நகரங்கள் மற்றும் 228 திரைகளில் இப்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது, ஒரு மாதத்திற்கு முன்னரே ஆரம்பித்துள்ள இந்த சாதனை இப்படம் அரங்கம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. மும்பை, புனே, கோவா, அகமதாபாத், டெல்லி, சூரத், இந்தூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை உட்பட பல நகரங்கள் இந்த முன்பதிவு பட்டியலில் உள்ளன.

மிகசமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னதாக படக்குழுவினர் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் மீண்டும் இந்த திரைப்படத்தில் வருவது, ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது. நடிகர் Sam Neill இப்படத்தில் Dr. Alan Grant பாத்திரத்திலும் Dr. Ellie Sattler பாத்திரத்தில் நடிகை Laura Dern வும், Dr. Ian Malcom பாத்திரத்தில் நடிகர் Jeff Goldblum மும் நடித்துள்ளனர். டைனோசர்களும் மனிதர்களும் இணைந்து வாழ முடியுமா? என்று அதிகம் பேசப்படும் வாதத்தை, இப்படம் இன்னும் பிரம்மாண்டமாக காட்டவிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும்படி உருவாக்கபட்டிருந்தது, அதுமட்டுமில்லாமல் திரை வரலாற்றில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்பட தொடருக்கு, ஒரு அற்புதமான பெரிய பிரியாவிடையை பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2015 இல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் மூலம் 1.7 பில்லியன் டாலர் உலக வசூல் சாதனையை நிகழ்த்திய Colin Trevorrow, ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். Michael Crichton உருவாக்கிய கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து Derek Connolly (Jurassic World) & Trevorrow உருவாக்கிய கதைக்கு , Emily Carmichael & Colin Trevorrow திரைக்கதை எழுதியுள்ளனர் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

இத்திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 10ஆம் தேதி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 3D, IMAX 3D, 4DX & 2D-ல் இப்படம் வெளியாகிறது.

உடனே முந்துங்கள், உங்கள் டிக்கெட்டை இப்பொழுதே பதிவு செய்யுங்கள்.

Cinema News Tags:ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது

Post navigation

Previous Post: The Epic conclusion to the Jurassic era is now open for audiences in India
Next Post: RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE IN TAMIL, TELUGU, KANNADA & MALAYALAM from 20th May 2022

Related Posts

‘Dancing Rose’ Shabheer Kallarakkal starrer Mystery-Thriller “Birthmark” ‘Dancing Rose’ Shabheer Kallarakkal starrer Mystery-Thriller “Birthmark” Cinema News
நடிகர் சூரி பேசியதாவது, “’விடுதலை நடிகர் சூரி பேசியதாவது, “’விடுதலை’ படம் ரிலீஸான வேகத்திலேயே இப்படியொரு நன்றி சொல்லும் நிகழ்வு Cinema News
Nikhil, Bharat Krishnamachari, Pixel Studio’s #Nikhil20 Titled Swayambhu, The Ferocious First-look Nikhil, Bharat Krishnamachari, Pixel Studio’s #Nikhil20 Titled Swayambhu, The Ferocious First-look Unleashed Cinema News
Samyuktha as Nyshadha in Nandamuri Kalyan Ram's periodical spy thriller 'Devil', first look poster unveiled Samyuktha as Nyshadha in Nandamuri Kalyan Ram’s periodical spy thriller ‘Devil’, first look poster unveiled Cinema News
Tamil_News_Veteran-actress-Jayanthi-put-on-ventilator-in-Bengaluru_indiastarsnow.com நடிகை ஜெயந்திக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர் Cinema News
Kalpathi S. Aghoram's AGS Entertainment to produce #Thalapathy68 directed by Venkat Prabhu with music by Yuvan Shankar Raja Kalpathi S. Aghoram’s AGS Entertainment to produce #Thalapathy68 directed by Venkat Prabhu with music by Yuvan Shankar Raja Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme