Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE IN TAMIL

ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது

Posted on May 14, 2022 By admin

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! #RRRonZEE5

சென்னை மே 13, 2022 – இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது. இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஜீ5 தளத்தில் மே 20, 2022 அன்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகுமென ஜீ5 அறிவித்துள்ளது. படம் வெளியாகி 50 வது நாளை கடந்த நன்நாளில் படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்த இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜீ5 தளம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படம், மார்ச் 25, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி, இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

மே 20 நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் என்பது, ஜீ5 தளத்தில் ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படத்தை கொண்டாட, ரசிகர்களுக்கு மேலும் ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. 4K தரத்திலும், டால்பி அட்மாஸ் தரத்திலும் வீட்டிலிருந்தபடியே வீட்டுத் திரைகளிலும், மொபைல் போனிலும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இந்த திரைப்பட வெளியீட்டு அறிவிப்பைக் குறிக்கும் வகையில் ஜீ5 தளத்தால் வெளியிடப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக டிரெய்லரால், தென்னிந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தென்னிந்திய மொழி பேசாத பார்வையாளர்களும் ஜீ5 தளத்தின் இந்த உலக டிஜிட்டல் பிரிமியரைப் பற்றி மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் படத்தின் ஒரிஜினல் மொழியில் உருவான வசனங்களுடன் படத்தை சப்டைட்டிலுடன் பார்க்கலாம்! “ஆர் ஆர் ஆர்” RRR திரைப்படம் ஜீ5 தளத்தில் TVOD இல் கிடைக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” RRR திரைப்படம் , இந்திய திரைத்துறையின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. வர்த்தக அறிக்கைகளின்படி, உலகம் முழுவதும் இப்படம் ரூ. 1000 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

Cinema News Tags:ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது, ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு

Post navigation

Previous Post: RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE IN TAMIL, TELUGU, KANNADA & MALAYALAM from 20th May 2022
Next Post: Buds & Berries Expands Online Portfolio with the Launch of D2C Platform

Related Posts

Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Cinema News
ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நாயகிகள் Cinema News
Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. Cinema News
இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. Cinema News
Actor Sivakarthikeyan Upcoming Movie Maaveeran Actor Sivakarthikeyan Upcoming Movie Maaveeran Cinema News
காஜல் அகர்வாலின் மெழுகு சிலை ங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் நடிகை காஜல் அகர்வால் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme