Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா

Posted on May 13, 2022 By admin

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.

கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக்கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV

கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாக இருக்கிறது.

Cinema News Tags:புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா, புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா

Post navigation

Previous Post: ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ திரையுலகத்தினருக்காக பிரத்யேக திரையிடல்
Next Post: ரீநிதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் துஷ்யந்த், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகும் நகைச்சுவை ததும்பும் படம் ஷூட்டிங் ஸ்டார்

Related Posts

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள் பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள் Cinema News
Naga Chaitanya, Venkat Prabhu, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen’s Bilingual Film Huge Action Schedule Begins Naga Chaitanya, Venkat Prabhu, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen’s Bilingual Film Huge Action Schedule Begins Cinema News
AVATAR: THE WAY OF WATER அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் மூன்றே நாட்களில் 45 ப்ரீமியம் ஃபார்மேட் ஸ்கிரீன்களில் 15,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று சாதனை! Cinema News
surveen chawla hot wallpaper-indiastarsnow.com தேசிய விருது இயக்குநர் அந்த நடிகையிடம் உன் நிர்வாண உடலை இஞ்ச் இஞ்சாக ரசிக்க வேண்டும் என்று கெஞ்சி உளர் Cinema News
ஷாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம் ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’! Cinema News
வாய்தா திரைவிமர்சனம் வாய்தா திரைவிமர்சனம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme