Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா*

ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா*

Posted on May 13, 2022 By admin

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் சிறப்புக் காணொலி (கிளிம்ப்ஸ்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத வகையிலான அதிரடி ஆக்‌ஷனில் மோகன் கலக்கி உள்ள நிலையில், 1.70 லட்சம் பார்வகளுக்கு மேல் இது வரை கிளிம்ப்ஸ் பெற்றுள்ளது.

ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உலகத் தரத்தில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஹரா படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், கிளிம்ப்ஸும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பையும் விறைவில் நிறைவு செய்து, படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய் ஸ்ரீ தலைமையிலான படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

சாருஹாசன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘தாதா 87’ மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதைநாயகனாக அறிமுகமாகும் விரைவில் வெளியாகவுள்ள ‘பவுடர்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

லியாண்டர் லீ மார்ட்டி ஹரா படத்திற்கு இசையமைக்க, மனோ தினகரன் மற்றும் பிரஹாத் முனியசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பை குணா கையாள, படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

Cinema News Tags:ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா*

Post navigation

Previous Post: Thevarajah wins Best director and best film awards at various global film festivals earns global
Next Post: Mohan rocks in action avatar: Haraa glimpse raises expectations*

Related Posts

அமலா விரைவில்-indiastarsnow.com அமலா விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது Cinema News
“கல்லறை” படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாநில தலைவர் இரா. முத்தரசன் அவர்கள் கொண்டு கலந்து கொண்டு பேசினார் Cinema News
'அவள் அப்படித்தான் 2' திரைப்பட விமர்சனம் ‘அவள் அப்படித்தான் 2’ திரைப்பட விமர்சனம் Cinema News
ஷாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம் ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’! Cinema News
என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு” Cinema News
ஒய் ஜி மகேந்திராவின் ‘சாருகேசி’ நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme