Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரங்கா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ரங்கா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Posted on May 11, 2022 By admin

ரங்கா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Boss Movies சார்பில் விஜய் K செல்லையா தயாரிப்பில் சிபிராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரங்கா”. பரபர கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினத் பட வெளியீட்டை ஒட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

கலை இயக்குநர் அருண் பேசியது
இது எங்கள் டீமில் எல்லோருக்கும் முக்கியமான படம் . நண்பர் வினோத்தின் பார்வை மிக வித்தியாசமாக பிரமாண்டமாக இருக்கும், அவர் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் தரும் இன்புட் துல்லியமாக இருக்கும். காஷ்மீர் உடைந்த பாலம் ஒன்றை உருவாக்கி ஷீட் செய்தோம். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது உங்களுக்கு பிடிக்குமென்று நம்புகிறேன் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது
வினோத் நேபாளி படத்தில் வேலை பார்த்த போதிலிருந்து தெரியும் அவரது முதல் படத்தில் என்னை எழுத அழைத்ததற்கு நன்றி. இசையமைப்பாளரை இன்று தான் நேரில் சந்திக்கிறேன். மெட்டு மிக எளிமையான அழகானதாக இருந்தது. பாடல்கள் மிக எளிதாக அமைந்தது. படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியது..
ரங்கா நினைப்பது மாதிரி இல்லாமல் வித்தியாசமான படம் ஆனால் அதற்கேற்ற செலவில் நல்ல பட்ஜெட்டில் மிக அருமையாக எடுத்துள்ளார்கள் ரோஜா படத்திற்கு பிறகு காஷ்மீரை மிக அற்புதமாக காட்டியுள்ளார்கள் இந்த மாதிரி கதையை வினோத் சொல்லும் போது தயாரிப்பாளர் விஜய் முழுமையாக செய்து எடுத்து வந்ததற்கு வாழ்த்துகள். சிபிராஜ் கதை தேர்ந்தெடுப்பது வித்தியாசமாக இருக்கும் இப்படமும் அதே போல் நல்ல படமாக இருக்கும். இந்த படத்தின் உழைப்புக்கு பலன் கிடைக்கும் வாழ்த்துக்கள்

இசையமைப்பாளர் ராம் ஜீவன் பேசியது…
ரங்கா எனக்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. தயாரிப்பாளர் விஜய் எனது நண்பர். இந்த கதை மிக அழகான கதை பரபரவென செல்லும் திரைக்கதை. இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது. ஐந்தும் வேறு வேறு விதமாக இருக்கும். படம் தியேட்டரில் பார்க்க வேண்டுமென உருவாக்கியுள்ளோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகர் அஸார் பேசியது
இப்படம் நண்பர்களால் தொடங்கப்பட்டு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. காஷ்மீரில் படம்பிடித்தோம் குழுவில் யாருக்குமே இந்தி தெரியாது படமெடுப்பது வேலை பார்ப்பது எல்லாம் மிக கடினமாக இருந்தது. இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. அதை நடிக்க வைத்த அனுபவம் மறக்க முடியாததது. நாயை நடிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டோம். படம் நன்றாக வந்துள்ளது.

வில்லன் நடிகர் மோனிஷ் ரகேஜா பேசியது…
இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளேன் இது எனக்கு தமிழில் அறிமுகம். ஃபேஸ்புக் மூலம் தான் இயக்குநர் என்னை அழைத்தார் வாய்ப்பு தந்த இயக்குநர் வினோத் சாருக்கு நன்றி. சிபிராஜ் மிக பெரிய ஒத்துழைப்பு தந்தார். படம் எப்போது ரிலீஸாகும் என ஆவலில் இருந்தேன் இப்போது மகிழ்ச்சியாக உள்ளது.

இயக்குநர் வினோத் பேசியது…
ரங்கா எனது முதல் படம். நிறைய தடைகள் தாண்டி தான் இங்கு வந்துள்ளேன் எல்லோருக்கும் அந்த தடைகள் இருக்கும் அது எனக்கும் குழுவிற்கும் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து படம் இப்போது ரிலீஸிக்கு வந்தது மகிழ்ச்சி. எனது குடும்பம் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் விஜய்யிடமிருந்து தான் இந்தப்படம் துவங்கியது. அவருக்கு நன்றி. இந்தக்கதைக்கு சிபிராஜ் சார் கச்சிதமாக இருப்பார் என அவரை அணுகினோம் அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. சிபிராஜ் இப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். நிகிலா விமல் இந்தப்படத்தில் மிக முக்கியமான பாத்திரம். இப்படத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார்கள். அனைவருக்கும் நன்றி. இப்படம் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஜானர் மாறிக்கொண்டே இருக்கும். மோனிஷ்க்கு நீச்சல் தெரியாது ஆனால் தெரியும் என சொல்லி நடிக்க வந்தார். அவர் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

விஜய் K செல்லையா கூறியதாவது…

ஒரு படத்தை எடுப்பதை விட ரிலீஸ் செய்வது கஷ்டம். சக்தி அண்ணாவுக்கு நன்றி, சிபிராஜ் அண்ணா இல்லையென்றால் இந்த படமே இல்லை அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.

நடிகர் சிபிராஜ் பேசியது…
விஜய் தான் என்னை அணுகி கதை கேளுங்கள் என்றார். இந்தப்பட நாயகனுக்கு ஏலியன் சிண்ட்ரோம் இருக்கும் நான் நினைப்பதை கை கேட்காது, கதை பிடித்திருந்தது. ஆனால் புது இயக்குநர் எப்படி எடுப்பார் என்ற தயக்கம் இருந்தது ஆனால் காஷ்மீரில் ஃபர்ஸ்ட் ஷெட்டீயூலிலேயே இயக்குநரின் திறமை தெரிந்துவிட்டது மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். நானே தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளேன் ஆனால் காஷ்மீர் போய் எடுக்க வேண்டும் என்பதை நான் ஒத்துகொண்டிருக்க மாட்டேன், விஜய் ஒத்துக்கொண்டு பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்துள்ளார் அவருக்கு நன்றி. படத்திற்கு ஓடிடி வாய்ப்புகள் வந்தாலும் திரையரங்குளில் கொண்டு வருவதில் பிடிவாதமாக இருந்தார் விஜய். படத்தை சக்திவேல் சார் ரிலீஸ் செய்வது மிக மகிழ்ச்சி. எப்போதும் என்னுடைய படங்களுக்கு ஆதரவு தந்துள்ளீர்கள், இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.

Cinema News Tags:ரங்கா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Post navigation

Previous Post: Sibi Sathyaraj starrer “Ranga”
Next Post: CavinKare Launches Small Onion Hair Wash Powder Under its Flagship Hair Care Brand Meera

Related Posts

Actor AshokKumar Latest pic-inadiastarsnow.com Actor AshokKumar Latest pic Cinema News
அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...! அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…! Cinema News
shanam shetty-indiastarsnow.com சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு Cinema News
சிவாங்கியின் தீவானா பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது. Cinema News
சினம் கொள் படம் அந்த மாயையை உடைத்து, ‘யு’ சான்றிதழை பெற்று Cinema News
Enga Kulasamy-indiastarsnow.com ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme