Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

Posted on May 10, 2022 By admin

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இணையத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தை மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு /ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Cinema News Tags:ஆதார்’ புதிய அப்டே, தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

Post navigation

Previous Post: Nenjukku Needhi Audio and Trailer Launch event
Next Post: பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ்

Related Posts

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன் புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன் Cinema News
மாயோன் திரைவிமர்சனம் மாயோன் திரைவிமர்சனம் Cinema News
Spider-Man No Way Home becomes a sensational headline for crashing theatre websites due to heavy booking Spider-Man No Way Home becomes a sensational headline for crashing theatre websites due to heavy booking Cinema News
இமயமலையில் ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார் இமயமலையில் ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார் Cinema News
காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் Cinema News
Vish the fiery rebellious villain Baddie in Liger is ready to rock silver screens on Friday !!! Vish the fiery rebellious villain Baddie in Liger is ready to rock silver screens on Friday !!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme