Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

Posted on May 7, 2022 By admin

இந்தியாவில் நாளுக்கு நாள் மார்வல் படங்களுக்கான ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே உள்ளனர். காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. அதனை தொடர்ந்து தற்போது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் படங்கள் வெளியான பின்பு டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரத்தின் மதிப்பு அதிகமானது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் படம் எடுக்கப்பட்டு உள்ளது. டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரத்தில் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் எலிசபெத் ஓல்சன், சோஷிட்லா கோம்ஸ் போன்றோர் நடித்துள்ளனர். ஸ்பைடர்மேன் படங்களை எடுத்த சாம் ரைமி இந்த படத்தை இயக்கி உள்ளார். வாண்டா தனது கனவில் வரும் இரண்டு குழந்தைகளுடன் வாழ ஆசைப்படுகிறார். இதனால் அவர்கள் வாழும் மற்றொரு உலகத்திற்கு சென்று அவர்களுடன் இருக்க விரும்புகிறார்.

அமெரிக்கா சாவேஸிடம் உள்ள சக்திகளை பெற்று மெல்டிவேர்சை ஓபன் செய்து அங்கு செல்ல விரும்புகிறார். இதனால் அவரை தேடி செல்கிறார் வாண்டா. சாவேஸை தேடும் வாண்டாவிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற முயல்கிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இறுதியில் வாண்டா அந்த சக்திகளை பெற்றாரா? டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இதனை தடுத்தாரா என்பதே டாக்டர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்-ன் கதை.

மார்வெல் படங்களில் உள்ளது போலவே இந்த படத்திலும் கிராபிக்ஸ் அல்டிமேட் ஆக உள்ளது. அசாத்தியமான நிகழ்வுகளை கண்முன்னே தத்துரூபமாக கொண்டுவந்துள்ளார் இயக்குனர் சாம் ரைமி. முந்தைய மார்வல் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் காமெடி, சென்டிமென்ட், டிராமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுத்துள்ளனர். மல்டிவேர்ஸை முழுவதுமாக வைத்து வந்துள்ள இந்த திரைப்படம் அடுத்தடுத்த மார்வல் படங்களுக்கு அடித்தளமாக உள்ளது. மல்டிவேர்ஸ்குள் செல்லும் போது காட்டப்படும் காட்சியில் கிராபிக்ஸில் படுபயங்கரமாக உள்ளது. இன்னும் கொஞ்சம் நேரம் காட்டலாமே என்று சொல்லும் அளவிற்கு தத்துரூபமாக இருந்தது. இடண்டாம் பாதியில் இசையை வைத்து வரும் சண்டை காட்சி, வித்தியாசமாக மற்றும் புதிதாக இருந்தது. மேலும் படம் முழுக்க வசனங்களும் படு சூப்பராக இருந்தது.

இரண்டு மணி நேரமே மட்டும் ஓடும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம், கதையில் இருந்து விலகாமல் செல்கிறது. இது ஒருவிதத்தில் பாசிட்டிவ் என்றாலும் மார்வல் ரசிகர்களை அவ்வளவாக கவர வில்லை. முந்தைய படங்களில் இருந்ததுபோல கூஸ்பம்ஸ் என்று சொல்லும் அளவிற்கு பெரிதாக எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. ட்ரெய்லரில் காண்பித்த எதிர்பார்ப்பு படம் முடிந்து வெளியே வரும்போது ஏற்படவில்லை. இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் 3d காண பெரிய முக்கியத்துவமும் இடம்பெறவில்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே 3டியில் நன்றாக இருந்தது. நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்தில் இன்னும் சில மாஸ் காட்சிகளை வைத்து இருக்கலாம்.

Cinema News, Movie Reviews Tags:டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

Post navigation

Previous Post: சாணிக் காயிதம் திரைப்படம் மே 6 அன்று பிரைம் வீடியோவில் வெளியானது…
Next Post: Doctor Strange in the Multiverse of Madness Review

Related Posts

ஜினிகாந்த் படத்துக்கு இமான்தான் இசை Cinema News
Theerpukkal Virkapadum Audio and Trailer Launch celebrity Speech Theerpukkal Virkapadum Audio and Trailer Launch celebrity Speech Cinema News
ரஜினிகாந் வருமானத்தை மறைத்த விவகாரம் வருமான வரித்துறை அபராதம் ரஜினிகாந் வருமானத்தை மறைத்த விவகாரம் வருமான வரித்துறை அபராதம் Cinema News
Meendum Oru Mariyath மீண்டும் ஒரு மரியாதை திரைவிமர்சனம் Movie Reviews
நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம் Cinema News
Actor Soori -indiastarsnow.com வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறேன் சூரி Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme