Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted on May 7, 2022 By admin

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் .

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மைக்கேல்’. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது இவர்களுடன் தயாரிப்பாளர்கள் மைக்கேல் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏராளமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். முன்னணி இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் தயாரான ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ‘கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்’ என்ற வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சந்தீப் கிஷனின் தோற்றம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. அவரின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்.. ஆகியவை சிறந்த ஆக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதனால் இணையத்தில் வெளியான சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட, கூடுதலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்துவருகிறது.

Cinema News Tags:சந்தீப் கிஷன் - விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் 'மைக்கேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் 'மைக்கேல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Post navigation

Previous Post: Doctor Strange in the Multiverse of Madness Review
Next Post: Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Michael First Look Dropped

Related Posts

மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி* Cinema News
’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது People Media Factory has created a new personal record of shooting continuously for 63 days without a single day break and completed the film. Cinema News
The 3rd G20 Sherpa Meeting begins in Hampi, Karnataka -indiastarsnow.com The 3rd G20 Sherpa Meeting begins in Hampi, Karnataka Cinema News
Actress Saidhanshika Latest Photo Shoot-indiastarsnow.com Actress Saidhanshika Latest Photo Shoot Cinema News
NAILS’N BEYOND BRAND AMBASSADOR,IYKKI BERRY INAUGURATES THE FLAGSHIP STORE IN CATHEDRAL ROAD, CHENNAI NAILS’N BEYOND BRAND AMBASSADOR,IYKKI BERRY INAUGURATES THE FLAGSHIP STORE IN CATHEDRAL ROAD, CHENNAI Cinema News
Zee5 தளத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme