Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விசித்திரன் திரைவிமர்சனம்

விசித்திரன் திரைவிமர்சனம்

Posted on May 6, 2022 By admin

விசித்திரன் படத்தின் மைய கதை பொள்ளாச்சி மாவட்டம் வால்பாறையில் நடைபெறுமாறு உருவாக்கியுள்ளார் இயக்குனர் பத்மக்குமார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணி ஓய்வுக்கு தாமக முன்வந்து வீட்டில் தனியாக வசித்து வருவார். நடிகர் சுரேஷ் மனைவியாக மலையாள நடிகை ஷாம்னா காசிம் நடித்துள்ளார். சுரேஷின் முன்னாள் காதலி திடீர் மரணம் அடைய அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் ஆர்.கே. சுரேஷ. தனது மணைவியிடம் சற்று விலகி இருக்க நினைக்கிறார்.

இதனால் அவரது மனைவியோ அவரை விவாகரத்து செய்து விட, ஆர்.கே. சுரேஷ தனது மகள் உடன் இருப்பார். மகள் விபத்தில் இறந்து விட விரக்கித்தில் இருக்கும் சுரேஷ் திடீரென்று தனது முன்னாள் மனைவிக்கு மூலைச்சாவு ஏற்பட்டாதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர்.

இதை சுரேஷ் விபத்து அல்ல. நடந்தது திட்டமிட்ட கொலை என்றும் அவர் மகள் இதை போன்று உடலுறுப்பு தேவைக்காக கொலை நடந்து இருப்பதை கண்டறிந்து கொலையாளிக்கு ஆதர பூர்வமாக மருத்துவமனை மற்றும் கொலையாளியை நிருப்பிக்க சுரேஷ் எடுக்கும் முயற்ச்சிகளும், அதில் இருக்கும் சாவல்களும் புலனாய்வுகளும் என்று திரை கதை செல்கிறது.

மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் பத்மகுமார் முன்னாதாக இயக்கி மிக பெரிய வெற்றி பெற்ற படம், அதே இயக்குனர் தமிழில் மீண்டும் இயக்கியிருக்கிறார். வெற்றி வேல் மாஹேந்திரன் ஒளிப்பதிவு நன்றாக காட்சி படுத்திருக்கிறார். அதுவும் படத்திற்க்கு கூடுதல் அழகு சேர்த்து உள்ளது.
சதிஷ் சூர்யா படத்தின் எடிட்டிங் மிகவும் சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

படத்திற்க்கு கூடுதல் பலமாக பகவதி பெருமாள், இளவரசு, ஜார்ஜ் மர்யான், அனில் முரளி பாண்டி ரவி போன்றோர் மிகவும் அற்புதமாக தங்கள் நடிப்பு திறமை வெளிபடுத்திள்ளனர். படத்தில் காவல்துறை அதிகாரி கொலையாளியை எப்படி புலானாய்வு செய்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை தத்துருவமாக காட்சிபடுத்தி இருக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிராகஷ் இசைமைத்துள்ளார். பின்னணி இசையோ படத்திற்குள் நம்மை ஒன்றிணைய வைக்கிறது.

Cinema News, Movie Reviews Tags:விசித்திரன் திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி
Next Post: கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

Related Posts

சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன் சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன் Cinema News
நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல் Cinema News
தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து! Cinema News
கார்த்தி – ஜோதிகா படத்தில் இணைந்த மற்றொரு நடிகை Cinema News
Bayview Project LLP-Udhayanidhi Stalin-Arunraja Kamaraj Bayview Project LLP-Udhayanidhi Stalin-Arunraja Kamaraj Cinema News
Actor AshokKumar Latest pic-inadiastarsnow.com Actor AshokKumar Latest pic Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme