கே.எஸ்.ரவிக்குமார், எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத நடிப்பு. பிக்பாஸ் தர்ஷனின் நடிப்பில் தான் பங்கு இல்லை என்றால், படத்திலும் பெரிய அளவில் அவருக்கு பங்கில்லை. பங்கில்லாத அவருக்கு, இன்னொரு பங்கு இல்லாத நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா.
கோவை மாவட்டத்தில் தந்தையின் பிள்ளையாக வளரும் ரோபோடிக் இன்ஜினியர் இளைஞருக்கு, வெளிநாடு செல்ல ஆசை. அவரது தந்தை அதற்கு நேர்மாறானவர். இயற்கையோடு ஒட்டி வாழ விரும்புபவர். அவரை சமாதானப்படுத்தி, ஜெர்மன் செல்லும் மகன், தனிமையில் இருக்கும் தந்தையை கவனிக்க, தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு தருகிறார். துவக்கத்தில் அதை வெறுக்கும் முதியவர், பின்னர், ரோபோவின் அன்பில் ஆழ்ந்து, அதையே மகனாக பாவிக்கிறார்.
யோகி பாபு, பிளாக் பாண்டி, பூவையார் என சிரிப்பை வரவழைக்க எத்தனையோ பேர் இருந்தும், சிரிப்பு என்னவோ கடைசி வரை வரவில்லை.
கே.எஸ்.ரவிக்குமார் மாதிரியான லெஜண்ட் இயக்குனர் தயாரிக்கும் படத்தில் இந்த குறை, கொஞ்சம் ஏமாற்றம் தான். ஒரே ஆளாக, கே.எஸ்., மட்டுமே படத்தை சுமக்கிறார். அவருக்கு ஒருவர் கூட தோல் கொடுக்கவில்லை; சில இடங்களில் ரோபோவை தவிர.
ஜிப்ரானின் இசையில் பின்னணி .அருவியின் ஒளிப்பதிவு தான், கண்ணும் குளிர்ச்சியாக இருந்தது. எடிட்டர் பிரவீன் மிகச்சிறப்பு