Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை

நடிகை ஷிவானி ராஜசேகர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை!!

Posted on May 5, 2022 By admin

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை பெற்று, ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் ! .

நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வகையில் இப்போது, அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்.

நடிகை ஷிவானி ராஜசேகர் தமிழ் சினிமாவில், நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “அன்பறிவு” படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் நடிகை ஷிவானி ராஜசேகர் நடிப்பில், தற்போது பல படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் பெற்றுள்ள, ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்ற இந்த சிறப்பு மரியாதை, அதைத்தொடர்ந்து இப்போது மதிப்புமிக்க ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்கு போட்டியிடுவது அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் பிரபலத்தையும் பெற்று தந்துள்ளது.

Cinema News Tags:ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு’ பட்டத்தை

Post navigation

Previous Post: Actress Shivani Rajashekar becomes ‘Femina Miss India Tamil Nadu’ & Competes with 31 contestants for the crown of ‘MISS INDIA’
Next Post: Attractive first glimpse of Samantha’s Yashoda out now!

Related Posts

பிக் பாஸ் - 4 தொடங்கும் தேதி வெளியானது ! பிக் பாஸ் – 4 விரைவில் புரோமோ Cinema News
சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்துகிறார்கள் சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்துகிறார்கள் கொதித்த ஹெச்.ராஜா Cinema News
Brahmastra Movie Review Brahmastra Movie Review Cinema News
நடிகை அசின்மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார் நடிகை அசின் மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார் Cinema News
காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டிரெய்லர் ! காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரெய்லர் ! Cinema News
Dada to hit screens worldwide on February 10 Dada to hit screens worldwide on February 10 Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme