Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சமந்தா நடிப்பில் யசோதா படத்தின் அசரவைக்கும் முதல் காட்சித்துணுக்கு !

சமந்தா நடிப்பில் யசோதா படத்தின் அசரவைக்கும் முதல் காட்சித்துணுக்கு !

Posted on May 5, 2022 By admin

சமந்தா நடிப்பில் யசோதா படத்தின் அசரவைக்கும் முதல் காட்சித்துணுக்கு !

யசோதா கண் விழிக்கிறாள், இதுவரையிலான அவளது உலகம் இனி இல்லை. அவளது சூழல், அவளது உடை, அவளது காலம் மற்றும் பேரமைதி அனைத்தும் ஆச்சர்யாமாக முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. அவளது இதயதுடிப்பின் சத்தம் அவள் காதை கிழிக்கும் நேரத்தில் அவள் ஜன்னல் கதவை திறக்கிறாள் அங்கு ஒரு புறா அவள் வேண்டும் சுதந்திரத்தை சுவாசிக்கிறது. அவள் அதை பிடிக்க நினைக்கிறாள் என்ன நடந்தது ?

மேல் கண்ட அனைத்தும் ‘யசோதா’ முதல் பார்வையில் இடம்பெற்றுள்ளவை. இந்த காட்சித்துணுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், படத்தில் இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார்.

Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சமந்தா நாயகியாக நடிக்கும் ‘யசோதா’ படத்தை தங்களின் 14வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது. திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் முதல் பார்வை இன்று வெளியான நிலையில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், “சமந்தா ‘பேமிலி மேன் 2’ வெப்சீரிஸ் மூலம் பான்-இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவரது வளர்ச்சியை மனதில் வைத்து, இந்த படத்தை சமரசமின்றி உருவாக்குகியுள்ளோம். சமந்தா தனது பாத்திரத்தை வெளிப்படுத்திய விதம், அவரது அர்பணிப்பு மிகவும் பாராட்டபடவேண்டியது .அவரது நடிப்பை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஏப்ரலில் சண்டை பயிற்சியாளர் வெங்கட் மேற்பார்வையில் கிளைமாக்ஸ் பகுதியை கொடைக்கானலில் படமாக்கினோம். ஏற்கனவே 80% படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜூன் 1வது வாரம் வரை படப்பிடிப்பு நடைபெறும். ஸ்பெஷல் எஃபெக்ட்களும் இந்தப் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எங்களின் இயக்குநர் ஹரி-ஹரிஷின் பணி பிரமிக்க வைக்கிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இசை: மணிசர்மா,
வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி
பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி ஒளிப்பதிவு: M.சுகுமார்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
எடிட்டர்: மார்த்தாண்டன், K.வெங்கடேஷ் லைன் புரடியூசர்: வித்யா சிவலெங்கா
இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி
இயக்கம்: ஹரி – ஹரிஷ்
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்
பேனர்: Sridevi Movies

Cinema News Tags:சமந்தா நடிப்பில் யசோதா படத்தின் அசரவைக்கும் முதல் காட்சித்துணுக்கு !

Post navigation

Previous Post: Attractive first glimpse of Samantha’s Yashoda out now!
Next Post: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Related Posts

‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ Cinema News
வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் நுழையும் காசாகிராண்டு;காசாகிராண்டு கமர்ஷியல் எனும் புதிய வர்த்தக பிரிவு உருவாக்க திட்டமிட்டிருக்கிறது வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் நுழையும் காசாகிராண்டு;காசாகிராண்டு கமர்ஷியல் எனும் புதிய வர்த்தக பிரிவு உருவாக்க திட்டமிட்டிருக்கிறது Cinema News
Wake up surgery இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது Cinema News
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் ! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் ! Cinema News
என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு” Cinema News
Theerpukkal Virkapadum Audio and Trailer Launch celebrity Speech Theerpukkal Virkapadum Audio and Trailer Launch celebrity Speech Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme