Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Posted on May 2, 2022 By admin

“

பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் சங்கையா கதாபாத்திரத்தை சித்தரிக்கிறார்.

தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குனராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழு கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் பேக்கப் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன். . இது அனைத்துப் பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பு ஏற்பத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை கற்பிப்பதாக இருந்தது. பொறுமை காத்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்றார்.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை ’சாணி காயிதம்’ சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.

ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’சாணி காயிதம்’ மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படும். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது.

Cinema News Tags:சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Post navigation

Previous Post: கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !
Next Post: Tamil revenge action drama Saani Kaayidham

Related Posts

ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம் Cinema News
Venus Celebrates 60 years of Excellence Venus Celebrates 60 years of Excellence Cinema News
தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் ! தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் ! Cinema News
The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike Cinema News
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின்சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ Cinema News
இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடைப்பெற்ற சாத்தான் குளம் சம்பவம் பற்றிய அறிக்கை இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடைப்பெற்ற சாத்தான் குளம் சம்பவம் பற்றிய அறிக்கை Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme