Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

Posted on May 2, 2022 By admin

Big Print Pictures திரு. I B கார்த்திகேயன் Tripura Creations & Tauras Cinecorp உடன் இணைந்து தயாரிப்பில், கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

Big Print Pictures தயாரிப்பில், சமீபத்தில் SONYLIV தளத்தில் வெளியான, ஆதி பினிசெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் நடிப்பில், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையமைப்பில் பிருதிவி ஆதித்யாவின் இயக்கத்தில் உருவான (தமிழ் மற்றும் தெலுங்கு), இருமொழித் திரைப்படமான “கிளாப்” மிக அற்புதமான வரவேற்பை பெற்றதில் தயாரிப்பாளர் திரு. I B கார்த்திகேயன் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். தற்போது, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ்பெற்ற பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனர், தெலுங்கு திரையுலகில் பல படங்களிக்கு பைனான்ஸ் செய்தவருமான, Tripura Creations திரு. முரளிகிருஷ்ணா வங்கயாலபதி உடன் கைகோர்த்து புதிய தமிழ் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். தற்போது Tripura Creations நிறுவனம் டாக்டர் ராஜசேகரின் “சேகர்” படத்தை தயாரித்து வருவது குறிப்பிடதக்கது.

Tauras Cinecorp திரு. வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் தெலுங்கில் “கார்த்திகேயா”, “காதலோ ராஜகுமாரி”, போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரித்தவர் தற்போது தமிழில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் ராஜ் வர்மா நடிப்பில் “கேங்க்ஸ்டர் கிரானி” படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த தயாரிப்பாளர்கள் மூவரும் இணைந்து, கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மதுரை பின்னணியில் ஆக்சன் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் CS இசையமைக்கிறார்.

Big Print Pictures, Tripura Creations & Tauras Cinecorp ஆகிய மூன்று நிறுவனங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்டில் பல நல்ல திரைப்படங்களை தயாரிக்கவுள்ளன, அதில் முதலாவதாக Big Print Pictures, சார்பில் புரடக்சன் நம்பர்: 9 திரைப்படம் மே 2022 முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

தயாரிப்பாளர்கள் – IB கார்த்திகேயன், முரளிகிருஷ்ணா வங்கயாலபதி & வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம்
தயாரிப்பு பேனர்கள் – Big Print Pictures,
Tripura Creations & Tauras Cinecorp வழங்குபவர்: ராஜ் வர்மா

கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்சன் நிரம்பிய இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம், திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய விருந்தாக இருக்கும். படத்தின் இயக்குனர், தட்சிணாமூர்த்தி ராமர் கூறும்போது, “கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார்.

சரத் குமாரின் கதாப்பாத்திரம் குறித்து மேலும் கூறுகையில், “இதுவரை சரத் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்.

Cinema News Tags:கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் !

Post navigation

Previous Post: Gautham Karthik-Sarath Kumar starrer action crime-thriller movie
Next Post: சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன்

Related Posts

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ Cinema News
அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா Cinema News
நடிகர் தல அஜித் குமார் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் Cinema News
ஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ் Cinema News
Actor Ramarajan and Music Director Isaignani Ilaiyaraaja collaborate after 23 years Cinema News
நான் எப்போதும் ஹீரோ தான் - '3.6.9' விழாவில் பாக்யராஜ் பேச்சு ! நான் எப்போதும் ஹீரோ தான் – ‘3.6.9’ விழாவில் பாக்யராஜ் பேச்சு ! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme