பயணிகள் கவனிக்கவும் படத்தில் அனைத்து நடிகர்களும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை மிகச் சரியாகவே கொடுத்து இருக்கிறார்கள்,. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படம் இது.
திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்கான மீடியம் என்றாலும் அதிலும் சமூக பொறுப்புடன் படம் எடுப்பவர்கள் அவ்வபோது வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் வரிசையில் இணைந்திருக்கும் உறுமீன்’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்திவேல் என்றால் மிகையாகாது.
விதார்த் பள்ளி நூலகத்தில் புத்தகக் காப்பாளராக இருக்கிறார். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர். அவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத அழகான குடும்பம்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் கருணாகரன் ஒரு மாத விடுமுறையில் சென்னை வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதீத ஆர்வமுடைய அவர், ஒரு நாள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார். அப்போது ஓய்வின்மையால் அசதியில் தூங்கிகொண்டிருக்கும் விதார்த்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்கிறார். அந்தப் பதிவு விதார்த்தின் வாழ்க்கையில் மட்டும் இன்றி கருணாகரன் வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை, அதில் இருந்து இருவரும் மீண்டார்களா இல்லையா, என்பதே படத்தின் கதை.
பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது.மக்களுக்கு அறிவுரை சொல்லும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அவ்வபோது நாம் சிரிக்கும்படியும் காட்சிகளை அமைத்து படத்தை கமர்ஷியலாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர், எந்த இடத்திலும் தான் சொல்ல வந்த கருத்தில் இருந்து விலகிச்செல்லாமல் பயணித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
அனைவரும் இதுபோன்ற படத்தினை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்
இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.