Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!*

அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் ‘ஓ மை டாக்’ என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!*

Posted on April 27, 2022 By admin

அமேசான் ஒரிஜினல்ஸின் ‘ஓ மை டாக்’- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்’ என குறிப்பிட்டு, ‘ஓ மை டாக்’ படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.

‘ஓ மை டாக்’ திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம்.

1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..!

‘ஓ மை டாக்’ – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக பின்னப்பட்ட அழகான கதை. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இனிய விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருப்பதும் ரசிகர்களின் வரவேற்பிற்கு காரணம். திரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக காண்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

2. சிம்பா மற்றும் ஆர்ணவ் இடையேயான காதல்

இப்படத்தில் நடித்திருக்கும் சிம்பா என்ற நாய்க்குட்டி அழகான தோற்றத்தில் இருப்பதையும், அர்ஜுன் வேடத்தில் நடிக்கும் அறிமுக நடிகர் ஆர்ணவ் விஜய் நாய்க்குட்டிகளுடன் கொண்டிருக்கும் பாசமும் திரையில் காண்பது அற்புதமான தருணங்கள். அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கும், நாய் குட்டிக்கும் இடையேயான அற்புதமான பந்தம் மற்றும் ரசாயன கலவையை பார்த்த பார்வையாளர்கள், குறிப்பாக செல்லப்பிராணிகளின் காதலர்கள்.. கதையுடன் வித்தியாசமான தொடர்பை உணர்வுபூர்வமாக உணர்ந்தனர். மேலும் இந்த குடும்பத்தினர் உண்மையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து அதற்கு ‘ஸ்னோ’ என பெயரிட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவரின் பந்தம் திரைக்குப் பின்னாலும் தொடர்ந்தது போற்றக்கூடியதாக இருந்தது.

3. அமேசான் பிரைம் வீடியோ உடன் சூர்யாவின் மற்றொரு வெற்றிகரமான தயாரிப்பு

நட்சத்திர தம்பதிகளான சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது பட நிறுவனத்தின் சார்பில் சிறந்த கதைகளை திரைக்குக் கொண்டு வருவதில் புகழ் பெற்றவர்கள். அமேசான் பிரைம் வீடியோ உடன் ‘ஓ மை டாக்’ மூலம், ‘ஜெய்பீம்’ போன்ற முக்கிய படத்தை கொடுத்த பிறகு வெற்றிகரமான தயாரிப்பாளர்களான அவர்கள், மீண்டும் ஒரு அழகான கதையுடன் இங்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இருவரும் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் வல்லவர்கள் என்பது மீண்டும் நிரூபித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் ‘உடன்பிறப்பே’, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ போன்ற பல அற்புதமான கதைகளையும் கொண்டு வந்துள்ளார்.

4. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் செல்ல பிராணிகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கவும்.

‘ஓ மை டாக்’ படத்தை செல்ல பிராணிகளின் மீது எல்லையற்ற பாசம் கொண்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரசிக்கக் கூடிய அழகான கதையாக இது அமைந்திருக்கிறது. குடும்ப பார்வையாளர்களை ஒரே இடத்தில், அவர்களின் வீட்டில் வசதியாக கொண்டுவர தயாரிப்பாளர்கள் ஒரு காரணத்தை கூறியுள்ளனர். செல்ல பிராணி பிரியர்களின் உணர்வுகளை தூண்டி, அவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அரவணைத்துக் கொள்வதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கும் ஒரு சரியான பொழுதுபோக்கு திரைப்படம் தான் ‘ஓ மை டாக்’.

5. ஆத்மார்த்தமான இசை மற்றும் சரோவ்வின் அற்புதமான இயக்கம்!

இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் மனதை சாந்தப்படுத்தும் இசை. ஒரு நாய்க்கும் அதன் மீது பாசம் கொண்டவருக்கும் இடையேயான உணர்வையும், ரசாயன மாற்றங்களையும் சிறந்த முறையில் விவரித்துள்ளது. சரோவ் சண்முகத்தின் அற்புதமான இயக்கம் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. கதைக்கும் போதிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. ‘ஓ மை டாக்’ படத்தில் சித்தரிக்கப்பட்ட உணர்வுடன் சிறந்த முறையில் இணைந்து இருப்பதால் இசையை கேட்பதற்கு நன்றாக உள்ளது.

‘ஓ மை டாக்’ படத்தை ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ளனர். ஆர். பி. டாக்கீஸ் சார்பில் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ். ஆர். ரமேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் இடையேயான 4 திரைப்பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ‘ஓ மை டாக்’ இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் பார்க்கவில்லை என்றால்… இப்போதே பாருங்கள். பார்த்து ரசியுங்கள்.

Cinema News Tags:அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!*

Post navigation

Previous Post: எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழுவினர்
Next Post: Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham*

Related Posts

Anbirkiniyal Movie Celebrity Show Event stills அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை Cinema News
lyca productions stop process-www.indiastarsnow.com பிரமாண்ட தமிழ் சினிமா தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது திவலில் Cinema News
லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் திரை விமர்சனம் லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் திரை விமர்சனம் Cinema News
தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது Cinema News
காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் Cinema News
Ananya Birla - Live 2019 - Chennai Ananya Birla is performing Live in Chennai Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme