Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பயணிகள் கவனிக்கவும்' பட டிரெய்லர் வெளியீடு

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘பயணிகள் கவனிக்கவும்’ பட முன்னோட்டம் வெளியீடு

Posted on April 24, 2022 By admin

நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.

இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ச்சியாக தேர்வு செய்து ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ படைப்பாக தங்களின் பிரத்யேக பார்வையாளர்களுக்காக வெளியிடுகிறது.

ஆஹா ஒரிஜினல்ஸின் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. சமூக வலைத்தளங்களைப் பற்றிய திரைக்கதை என்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இணையவாசிகளிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே திரையரங்குகளில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்களும்,‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு*, டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'பயணிகள் கவனிக்கவும்' பட முன்னோட்டம் வெளியீடு, பயணிகள் கவனிக்கவும்' பட டிரெய்லர் வெளியீடு

Post navigation

Previous Post: ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது
Next Post: பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்

Related Posts

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்' சிம்போனியில் வெளியீடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசிப் பாடல் ‘விஸ்வரூப தரிசனம்’ சிம்போனியில் வெளியீடு Cinema News
சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது சிபி சத்யராஜ் நடிக்கும் புரடக்சன் நம்பர் 1 பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது Cinema News
Vidharth turns detective for a mystery-thriller Cinema News
N 4 – திரை விமர்சனம்-indiastarsnow.com N 4 – திரை விமர்சனம் Cinema News
நான் மிருகமாய் மாற விமர்சனம் நான் மிருகமாய் மாற விமர்சனம் Cinema News
ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme