Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின்சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ

Posted on April 23, 2022April 23, 2022 By admin

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காயிதம்” (SaaniKaayidham) திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ !

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, ஆகியவையுடன் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பில் உள்ள பொருட்களை இணையம் மூலம் தேர்வு செய்யும் வசதியுடன், விரைவாகவும் இலவசமாகவும் நேரடியாக விநியோகம் செய்தல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு உங்கள் பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலமே புத்தம் புதிய “சாணிக்காயிதம்” திரைப்படத்தை காணமுடியும், மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது ஏர்டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

மும்பை, இந்தியா – 2022 ஏப்ரல் 22 : இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான “சாணிக்காயிதம்” திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பொன்னி (கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாத்திரம்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது, விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன் தோன்றும் பாத்திரம்) இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார் இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் திரைப்படம் பிரத்யேகமாக மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது, மற்றும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் சின்னி- Chinni-என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக்காயிதம் என்றபெயரிலும் ஒளிபரப்பாகிறது.

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா கான்டெண்ட் லைசென்ஸிங் தலைவர் மணீஷ் மெங்கானி கூறுகையில்…
ப்ரைம் வீடியோவில் நாங்கள் எப்போதுமே மொழி மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் சென்றடையும் வகையிலான கதைகளை தேடிவருகிறோம். அதிகளவில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் உலகளவிலான சிறப்புக் காட்சி வெளியீட்டுக்காக பிரைம் வீடியோ சித்தார்த் ரவிபதி மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,”

படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்…
“சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்” .
“வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில் அமைந்துள்ளது. பழிவாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”

“ ஒவ்வொரு வகையான கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவின் பெரும் விநியோகத்தின் துணையோடு இணைந்து உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்”.

திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறுகையில்..

“சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத்திரைப்படத்தைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”

டீசர் இணைப்பு : https://youtu.be/cBa6idXJoj4

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் கொண்ட பிரைம் வீடியோ வரிசையில் சாணிக்காயிதம் திரைப்படம் இணையவிருக்கிறது. அதில் இந்திய படங்களான Sharmaji Namkeen, Gehraiyaan,Shershaah, Sardar Udham, Jai Bhim,GulaboSitabo, Shakuntala Devi, Coolie No. 1, Durgamati, Chhalaang, SooraraiPottru,V, CU Soon, Nishabhdam, Halal Love Story, Middle Class Melodies, Maara, BheemasenaNalamaharaja, Mane No. 13, Penguin, Law, SufiyumSujatayum, PonmagalVandhal, French Biriyani மற்றும் பல படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ மேலும் சில இந்தியாவில் தயாரிக்க பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான Bestseller, Inside Edge Season 3,Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa,Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – AzaadiKeLiye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, மற்றும் Inside Edge ஆகியவற்றையும் வழங்குகிறது. விருது வென்ற மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்ற உலகளாவிய அமேசான் தொடர்களான Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, மற்றும் The Marvelous Mrs. Maisel போன்றவற்றையும் வழங்குகிறது, மேலும் நேரத்தைச் செலவிடுவதற்கும், எப்போது, எங்கு வேண்டுமானாலும் பார்ப்பதற்குமான ஏராளமான தேர்வுகளை வழங்குவதில் முழுகவனத்துடன் பிரைம் வீடியோ இயங்கி வருகிறது. இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவைகள் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வழங்கபட்டு வருகிறது.

பிரைம் உறுப்பினர்கள், சாணிக்காயிதம் திரைப்படத்தை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், ஸ்மார்ட் டீவி, மொபைல் போன்கள், Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV மற்றும் ஏனைய இயந்திரங்கள் வழியாக காணலாம். பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் போன் மற்றும் டேப்ளடில் எபிசோடுகளை டவுட்லோடு செய்து எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் ஆப்லைனில், கூடுதல் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம்.
பிரைம் வீடியோ இந்தியாவில், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பிரைம் உறுப்பினர் சேர்கை வருடத்திற்கு வெறும் ₹1499- ல் கிடைக்கிறது, புது பயனாளர்கள் மேலும் தகவலுக்கு www.amazon.in/prime – யை பார்க்கலாம்.

Cinema News Tags:கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின்சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ

Post navigation

Previous Post: ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்
Next Post: Saani Kaayidham MOVIE today announces the worldwide premiere Prime Video!!

Related Posts

Brinda Master to Direct - THUGS Brinda Master to Direct – THUGS Cinema News
நயன்தாரா ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம் நயன்தாரா ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம் Cinema News
Debut filmmaker Ganesh K Babu directorial “Production No.4” Debut filmmaker Ganesh K Babu directorial “Production No.4” Cinema News
முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர் Cinema News
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்* Cinema News
நீண்ட காத்திருப்பையும், கடின உழைப்பையும் கேட்ட 'கடாவர்'- அமலாபால் நீண்ட காத்திருப்பையும், கடின உழைப்பையும் கேட்ட ‘கடாவர்’- அமலாபால் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme