Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

oh my dog

ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அருண் விஜய்!!!

Posted on April 21, 2022 By admin

முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது.

நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம் என்றனர்.

100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய் பகிர்ந்துகொண்டதாவது..,
இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெயர்னர் ராஜவிற்கு ஒரு பெரிய நன்றி. மேலும் இயக்குனர் சரவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியது எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி.”

இயக்குனர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது…,
“நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படபிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.
இந்த கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம். ட்ரெயர்னர் ராஜா , நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார், அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம், நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்க சொன்னேன். இது உலகம் முழுக்க உள்ள ஒரு சாம்பியன்ஷிப் போட்டி. அது இங்கும் நிகழ்கிறது.

ஓ மை டாக் திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டி சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பை கூறும் ஒரு உணர்வு பூர்வமான கதை. அர்ஜூன், சிம்பாவை சந்திக்கிறான், அது அவனை காப்பாற்றுகிறது, அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான். பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களை கடந்து, வெற்றிப்பாதையை அடைகிறார்கள்.

“ஓ மை டாக்” திரைப்பட தயாரிப்பு: ஜோதிகா-சூர்யா, இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB Talkies-ன் S. R. ரமேஷ் பாபு, இசை: நிவாஷ் பிரசன்னா, ஒளிப்பதிவு: கோபிநாத்.

இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், ப்ரைம் வீடியோவில், இந்தியா உட்பட 240 நாடுகளின் பகுதிகளில் ஏப்ரல் 21, 2022-ல் பிரீமியர் ஆகவுள்ளது.

Cinema News Tags:ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அருண் விஜய்!!!, குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது., முன்ணனி நடிகர் அருண் விஜய்

Post navigation

Previous Post: Actor Arun Vijay narrates the paw-fect experience of working with more than 100 dogs in family entertainer Oh My Dog, releases on Prime Video on April 21
Next Post: Luck illa maamey – a fun video song

Related Posts

ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார் ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார் Cinema News
Vijay Devarakonda starrer “Liger” Press Meet லைகர் (Saala Crossbreed) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Cinema News
போத்தனூர் தபால் நிலையம் திரைவிமர்சனம் போத்தனூர் தபால் நிலையம் திரைவிமர்சனம் Cinema News
Saregama Originals to release 'Yaar Aval' musical video Saregama Originals to release ‘Yaar Aval’ musical video Cinema News
Amitabh Bachchan-indiastarsnow.com நடிகர் அமிதாப்பச்சன் தாதா சாகேப் விருதுக்கு தேர்வு Cinema News
A Short Film contest-indiastarsnow.com A Short Film contest Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme