Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்

மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்

Posted on April 13, 2022 By admin

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கே ஜி எஃப் 2’ படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள்.

ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘கேஜிஎப் சாப்டர் 2’ படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு பிரமாண்டமான கட் அவுட்டை வைத்திருக்கிறார்கள். ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பிரம்மாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள். அதனை வீடியோவாகவும், செல்ஃபியாகவும் எடுத்து தங்களது இணையப்பக்கத்திலும், சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக ‘ராக்கிங் ஸ்டார்’ நடிப்பில் வெளியாகும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ முதல் நாளன்று வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே இந்தி திரை உலகில் முதன் முதலாக நடிகர் ஒருவருக்கு 100 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் 'கே ஜி எஃப் 2' ராக்கிங் ஸ்டார் யஷ், மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்

Post navigation

Previous Post: Arun Vijay reacts to coming together with his father and son for the first time in Amazon Original Movie ‘Oh My Dog’
Next Post: A 32-year-old man with kidney failure undergoes safe & successful complex Heart Surgery at Medway Heart Institute, Chennai

Related Posts

மான்ஸ்டர் – சினிமா விமர்சனம் Cinema News
அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் 'டேக் டைவர்ஷன்' புதிய முயற்சிகளுக்கு தமிழ்த் திரை உலகில் எப்போதும் ஆதரவு உண்டு ! Cinema News
பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’ பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’ Cinema News
பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழா பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா Cinema News
காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள் Cinema News
ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே ஹீரோயினாக ரித்திகா சிங் சிறு வயது கனவை நினைவாக்கிய ‘ஓ மை கடவுளே Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme