Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வெப்' படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்..

ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை தொடர்ந்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்

Posted on April 4, 2022 By admin

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ‘வெப்’ படத்துக்காக

“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்..
வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..
இரவு முடியும் வரை… நீ ஆடு.. ”

எனும் பப் பாடலை பாடியுள்ளார். பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியீடும் அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Cinema News Tags:ஓ சொல்றியா மாமா..' வெற்றியை தொடர்ந்து 'வெப்' படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல், நட்டி - ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் வெப் படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்..

Post navigation

Previous Post: கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் குறும்படம்
Next Post: பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படமான “ஓ மை டாக்” வெளியீட்டினை அறிவிக்கிறது.

Related Posts

Allu Arjun and his staff bid adieu to Lord Ganesh Allu Arjun welcomes Lord Ganesh to his office and celebrates the festival of Ganesh Chaturthi Cinema News
வசந்த் ரவி தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான 'ASVINS' படத்தில் !! வசந்த் ரவி தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான ‘ASVINS’ படத்தில் !! Cinema News
S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA Cinema News
சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம் சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம் Cinema News
சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி Cinema News
Herewith i forward the press release pertaining to "The Warrior" Ustaad Ram Pothineni arrived with his first attack ‘The Warriorr’ teaser Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme