Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

Posted on April 2, 2022 By admin

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து செல்பி திரைப்படத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை வர்ஷா பொல்லம்மா, இயக்குனர் மதிமாறன், நடிகர் டி ஜி குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் டி.சபரீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Cinema News Tags:ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

Post navigation

Previous Post: மிர்ச்சி மியூசிக் விருதை வென்று, மாற்று திறனாளிகளுக்கு சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர்
Next Post: NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai

Related Posts

உலகத்தர இசையை நோக்கிய பயணத்தில் சுயாதீன இசைக் கலைஞர் ஷியாமளாங்கன்!! Cinema News
சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) Cinema News
மகாமுனி திரைப்படத்தின் விமர்சனம் மகாமுனி திரைப்படத்தின் விமர்சனம் Cinema News
shanam shetty-indiastarsnow.com சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு Cinema News
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் கவனத்தை ஈர்க்கும் யோகிபாபு வின் பொம்மை நாயகி பிப்ரவரி 3 வெளியீடு. Cinema News
Adivi Sesh’s Pan India Movie G2 First Look & Pre-Vision Unleashed Adivi Sesh’s Pan India Movie G2 First Look & Pre-Vision Unleashed Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme