Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாட்னர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Posted on March 30, 2022 By admin

*’பாட்னர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Cinema News Tags:நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக், பாட்னர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Post navigation

Previous Post: Colors Tamil launches an enthralling new non-fiction game show Pottikku Potti: R U Ready??
Next Post: விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

Related Posts

மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு-indiastarsnow.com மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு!!! Cinema News
என்ஜாய் ; விமர்சனம் Cinema News
இந்திய திரையுலக பிரபலங்கள் வாழ்த்தும் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம் பாலிவுட், கோலிவுட் பிரபலங்களின் பாராட்டை குவிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ் Cinema News
பகாசூரன் " படத்தின் டைட்டில் லுக் வெளியானது மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படத்தின் டைட்டில் லுக் வெளியானது Cinema News
சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் - சமுத்திரகனி சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் – சமுத்திரகனி Cinema News
ஜனவரி 7 -ல் வெளியாகிறது 'அடங்காமை' ! ஜனவரி 7 -ல் வெளியாகிறது ‘அடங்காமை’ ! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme