‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி செலுத்தி பின்னர் கே.ஜி.எப்-2 படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.
