Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சிறுநீரக ஆரோக்கியம் விழிப்புணர்வு நடைப்பயணம்

சிறுநீரக ஆரோக்கியம் விழிப்புணர்வு நடைப்பயணம்

Posted on March 13, 2022March 13, 2022 By admin

கே.பாக்யராஜ் மற்றும் நடிகை சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் தொடங்கி வைத்த சிறப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்”

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று காலை 7.30மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் சிறுநீரக பாதுகாக்க வேண்டி இரண்டு கிலோமீட்டர் நடை பயணத்தை இயக்குனர் பாக்யராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவர்களுடன் நடிகைகள் சாக்ஷி அகர்வால் மற்றும் சாயாசிங் மற்றும் மேத்தா மருத்துவமனையை சார்ந்த மருத்துவர் கலைவாணி மற்றும் கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சென்னை, மார்ச் 13, 2022: மேத்தா பன்னோக்கு மருத்துவமனை இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இன்டர்நேஷனல் பீடியாட்ரிக் நெப்ராலஜி அசோசியேஷன் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2 கிமீ தூர நடைப்பயணத்தை துவக்கியது. டாக்டர். பி.ஆர். நம்மாழ்வார் (இயக்குநர்-குழந்தை சிறுநீரகவியல் அவர்களின் வழிகாட்டுதலுடன் டாக்டர். கலைவாணி கணேசன் மற்றும் அவரது சகாக்களான டாக்டர் சுதா ஏகாம்பரம் மற்றும் டாக்டர் சுகன்யா கோவிந்தன் ஆகியோருடன் இணைந்து டாக்டர் மேத்தா மருத்துவமனையின் குழந்தைகள் சிறுநீரகவியல் துறை ஏற்பாடு செய்த நடைப்பயணமானது இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மற்றும் நடிகை சாயா சிங், சாக்ஷி அகர்வால் ஆகியோரால் கொடியசைத்து தொடங்கிவைக்கபட்டது.

200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்ற நடைப்பயணத்தில், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளின் முன்னெச்சரிக்கை மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

டாக்டர் கலைவாணி கணேசன், பேசுகையில் ” சிறுநீரக நோய் அறிகுறி மற்றும் நோய் மேலாண்மை, “சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் – டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களும் மருத்துவ மற்றும் சிறுநீரக பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

டாக்டர். மேத்தா மருத்துவமனை, பொது மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூகப் பொறுப்பில் அர்ப்பணிப்புடன் சமூகத்திற்கு தரமான சுகாதார சேவையை 89 ஆண்டுகளாக வழங்கி வரும் முன்னோடி மருத்துவமனையாகும். இதை உறுதி செய்யும் வகையில் இந்த நிறுவனத்தின் குழந்தைகள் சிறுநீரகவியல் துறை ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு நடைப்பயணத்தை நடத்துகிறது.
டாக்டர் மேத்தா பன்னோக்கு மருத்துவமனை 80 க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவு, 600 மருத்துவர்கள் 500 படுக்கைகளை கொண்டுள்ளது. எங்கள் பிரிவுகள் 20 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவியுள்ளன. 2 தலைமுறைகளில் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், 3 தலைமுறைகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் சேவை செய்த பாக்கியத்தை நாங்கள் பெற்றுள்ளோம். 20 லட்சத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் (>100,000 சிக்கலான அறுவை சிகிச்சைகள் உட்பட) மற்றும் 170 வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

Health News Tags:சிறுநீரக ஆரோக்கியம் விழிப்புணர்வு நடைப்பயணம்

Post navigation

Previous Post: Clap Movie Review
Next Post: இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கே எஸ் ரவிக்குமார்!!!

Related Posts

தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் தமிழகம் முழுவதும் உள்ள ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் Cinema News
சேவல் கண்காட்சியில் 300 சேவல்கள் கலந்துகொண்டது Health News
வயதான தோற்றத்தை போக்கி 6 குறிப்புகள்-indiastarsnow.com வயதான தோற்றத்தை போக்க 6 குறிப்புகள் Health News
சீமான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு!!!! Health News
தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் -indiastarsnow.com தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் Health News
coronavirus கொரோனாவிற்கு மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்? Health News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme