இந்தியளவில் சக்திவாய்ந்த கைரேகை சோதிடராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ், அவரின் சிஷ்யனாகவும் கைரேகை மூலமாக எதிர்காலத்தையே கணிக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் பிரபாஸ் அறிமுகமாகிறார். கைரேகை நிபுணரான கதாநாயகன் (பிரபாஸ்) தன்னுடைய குடும்பத்துடன் ரோம் நகரில் வாழ்ந்து வருகிறார் பிரபாஸ் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து வருகிறார்.
காதல், கல்யாணத்தில் விருப்பமில்லாமல் பல பெண்களுடன் சுற்றி வருகிறார் பிரபாஸ், ஆனால் ஒரு நாள் ரயிலில் பூஜா ஹெக்டேவை சந்திக்கும் பிரபாஸ் காதல் வையப்படுகிறார். இத்தாலியில் மருத்துவராக இருந்து வரும் பூஜா ஹெக்டேவை பிரபாஸ் பின்தொடர இருவரும் காதலில் விழுகின்றனர்.
மறுபுறம் தனது எதிர்காலத்தை ஏற்கனவே கணித்துள்ள பிரபாஸ் பூஜா ஹெக்டேவிடம் தான் இருவரும் ஒன்றாக சேரமுடியாது என்ற உண்மையை அவரிடம் கூறுகிறார். பிரபாஸுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பூஜா ஹெக்டே சில திடுக்கிடும் முடிவுகளை எடுக்கிறார்.
இதனால் நிலை தடுமாறும் பிரபாஸ் தனது துள்ளிய கணிப்பை தானே முறியடித்து எப்படி பூஜா ஹெக்டேவுடன் ஒன்றாக சேர்கிறார் என்பதே ராதே ஷ்யாம் படத்தின் மீதி கதை.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமளித்திருக்கிறார். சிறப்பான காட்சியமைப்பின் மூலம் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதியும்படி அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்லும் உணர்வை உருவாக்கியுள்ளார்.
தமனின் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது