Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !

அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !

Posted on March 6, 2022 By admin

Olympia Movies S. அம்பேத் குமார் வழங்கும்
கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில்,
அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் எப்போதுமே சிறந்த கதைகள் கொண்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் புதிதாக உருவாகும் “Production No.4” திரைப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் M செல்வாவின் முன்னாள் உதவியாளர் கணேஷ் K பாபு இயக்குகிறார். இத்திரைப்படம் நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது.

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் பேசியதாவது…
ஒரு தயாரிப்பாளராக இருப்பதை விட, நான் எப்போதும் சிறந்த கதைகளுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களின் ரசிகனாகவே இருந்து வருகிறேன், இயக்குநர் கணேஷ் K பாபு இந்த திரைப்படத்தின் திரைக்கதையை கூறியபோது, உடனடியாக என் மனதை வெகுவாக கவர்ந்தது. 2K கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக மேலும் முக்கிய அம்சமாக இது கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இருக்கும். அவர் இந்த காதல் கதையை மிக அழகான தருணங்களுடன், உணர்வுப்பூர்வமாக உருவாக்கியுள்ளார். கதையின் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படம் இளைஞர்களை மட்டுமல்ல, உலகளாவிய ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தனது திரைவாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஸ்டார் அந்தஸ்து’ பெற்றிருக்கும் நடிகர் கவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள அவரது கவனம், முயற்சிகள் மற்றும் அவரது அழுத்தமான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு உயிர் கொடுப்பதும் என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கணேஷ் கதை சொல்லும் போது, கவின் நாயகனின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என தோன்றியது. படத்திலுள்ள மற்ற நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள். கவின் இந்த திரைப்படத்தில் பங்குகொள்ள ஒப்புக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி, கவினின் நடிப்பு இயக்குநர் கணேஷின் அற்புதமான திரைக்கதைக்கு மேலும் அழகூட்டும், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 5, 2022 முதல் துவங்கியுள்ளது, மேலும் முழுத்திரைப்படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.

கவின் மற்றும் அபர்ணா தாஸ் உடன், ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர். எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பைக் கையாள்கிறார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும், சுகிர்தா பாலன் ஆடை வடிவமைப்பாளராகவும், அருணாச்சலம் சிவலிங்கம் ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக APV மாறன் பணியாற்றுகிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Cinema News Tags:அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !

Post navigation

Previous Post: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில்
Next Post: Debut filmmaker Ganesh K Babu directorial “Production No.4”

Related Posts

சாணி காயிதம் தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது சாணி காயிதம் தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது Cinema News
AVATAR: THE WAY OF WATER JAMES CAMERON’S AVATAR: THE WAY OF WATER IS THE NO 1 CHOICE FOR AUDIENCES ACROSS THE GLOBE, COLLECTS!! Cinema News
நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு நடிகை ரித்திகா சிங் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு Cinema News
Zee Studios South is all set to gift fans ‘King of Kotha’ starring Dulquer Salmaan this Onam 2023. Cinema News
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Cinema News
Prime Video held a special screening of Engga Hostel, the Tamil reboot of popular Hindi drama Hostel Daze, in Chennai Prime Video held a special screening of Engga Hostel, the Tamil reboot of popular Hindi drama Hostel Daze, in Chennai Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme