ஒரு மரத்தை குலதெய்வமாக கும்பிடும் குக்கிராமம், அது. அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி, மாயாண்டி. தனக்கு சொந்தமான நிலத்தை தானே உழுது விவசாயம் செய்கிறார். அவருடைய நிலத்தை கையகப்படுத்த இரண்டு பேர் பணத்தை காட்டி, ஆசை வார்த்தை பேசுகிறார்கள்.
அதற்கு மாயாண்டி மயங்காமல் விவசாயம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். ஆசை வார்த்தை பேசியவர்கள், மயில்களை கொன்று மாயாண்டியை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். பிரச்சினை கோர்ட்டுக்கு போகிறது. மாயாண்டி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டாரா?, இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஒரு கிராமத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் இவருக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவுமே தெரியாது. காக்கி சட்டையில் யார் வந்தாலும் அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் என நினைத்துக்கொள்ளும் அளவிற்கு அப்பாவித்தனமான மனிதர்.
விவசாயத்திற்காக பிறந்தவர் என்றும் சொல்லலாம். இதே கிராமத்தில் யானையை வைத்து வாழ்க்கை நடத்தி வருபவர் யோகி பாபு. அதேபோல் விஜய்சேதுபதி வாழ்க்கையில் மீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாத நபராக கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும், விவசாயத்தை பற்றி சொல்லும் விதமாகவும் இந்த படம் அமைந்து இருக்கிறது. ஊரில் மழை இல்லாததால் விவசாயம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் எல்லோரும் வெளியூருக்கு வேலை தேடி செல்கிறார்கள். இதனால் ஊருக்குள் எல்லோருக்குமே ஒரு தொடர்பு விட்டுப் போகிறது. இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. இந்த தடைகள் எல்லாம் எப்படி எதிர்கொண்டார்கள்? கடைசியில் திருவிழா நடந்ததா? இல்லையா? மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? விவசாயம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு வழக்கம் போல் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், யோகிபாபு காட்சிகள் மட்டும் படத்தில் குறைவாக இருப்பதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.