Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

துருவ் விக்ரம் மகான் திரைப்படம் மூலம் பாடகராக அறிமுகமாகிறார்

துருவ் விக்ரம் மகான் திரைப்படம் மூலம் பாடகராக அறிமுகமாகிறார்

Posted on February 9, 2022February 9, 2022 By admin

மகான் படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார்.

சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது. துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் ‘ மிஸ்ஸிங் மீ…’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.

Cinema News Tags:துருவ் விக்ரம் மகான் திரைப்படம் மூலம் பாடகராக அறிமுகமாகிறார்

Post navigation

Previous Post: விக்ரமின் 60 ஆவது திரைபடமான மகான்
Next Post: தென் மாவட்டங்களில் சாயம் படத்தை வெளியிட கூடாது

Related Posts

Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote Cinema News
Gautham Karthik-Sarath Kumar starrer action crime-thriller movie Gautham Karthik-Sarath Kumar starrer action crime-thriller movie Cinema News
தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் ! தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் ! Cinema News
சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்... சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்… Cinema News
23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார் 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார் Cinema News
ஆக்சன் திரைப்படத்தின் அப்டேட் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme