Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்

அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்

Posted on January 31, 2022 By admin

அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!?

‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘ராம் பொத்னேனி’ ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு … ‘RAPO-19’ என்ற டைட்டிலோடு ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் கதை.
இது.
ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘மிருகம்’ ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார்.

ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் என்பதால் இப்படம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்
‘தி வாரியர்’ என்று படத்துக்கு டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பில் உற்சாகமாக இருக்கிறது படக்குழு.

‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி – பவன் குமார் இருவரும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் அதிரடியாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைத் தந்த ‘சீட்டிமார்’ படத்தைத் தொடர்ந்து வரும் படம் என்பதால் ரசிகர்களிடமும் பெரிய ஏற்படுத்தியுள்ளது.

‘கிருத்தி ஷெட்டி’ தான் ஹீரோயின்.முக்கிய கதாபாத்திரத்தில் ‘அக்ஷரா கவுடா’ நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பிளஸ் ஆக இருக்கும். அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படம் மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிரடி நாயகனாக சென்னையில் பிறந்து வளர்ந்த ராம் பொத்தினேனி வருவார் என்பது நிச்சயம் .

Cinema News Tags:அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்

Post navigation

Previous Post: இயக்குநர் சுசி கணேசனின் வருங்கால சூப்பர் ஸ்டார் 2022
Next Post: RAPO plays tough cop in “The Warriorr”

Related Posts

Luck illa maamey - a fun video song Luck illa maamey – a fun video song Cinema News
எப்.ஐ.ஆர் படத்தின் அப்டேட் Cinema News
மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு-indiastarsnow.com மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு!!! Cinema News
Indian Basketball Federation President Aadhav Arjuna has said that the 3×3 Senior National Championship Men & Woman 2023 will be held in Chennai from 22nd to 24th.* Cinema News
லவ் டுடே’ திரைவிமர்சனம்! லவ் டுடே’ திரைவிமர்சனம்! Cinema News
அழகான ஆண் குழந்தைக்கு தாயான தயாரிப்பாளர் ஜி என் அன்புச்செழியனின் மகள் & கோபுரம் சினிமாஸ் திரையரங்குகளின் உரிமையாளர் சுஷ்மிதா சரண் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme