Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”

ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”

Posted on January 6, 2022 By admin

நடிகர் ஜீவாவும் அவரின் ரோம்-காம் படங்களும் பிரிக்க முடியாதவை. திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தில் ரோம்-காம் படங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு. ‘சிவா மனசுல சக்தி’ போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் தாண்டி இன்னும் எண்ணற்ற திரைப்படங்கள் நீளும் இந்த வரிசையில், தற்போது ஜீவா மீண்டும்
‘வரலாறு முக்கியம்’ என்ற ரோம்-காம் படம் மூலம் ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார்.

நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), R. சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Cinema News Tags:ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”

Post navigation

Previous Post: பொள்ளாச்சி என்னாச்சு? திரைப்பட விழாவில் இயக்குநர் பேரரசு கேள்வி
Next Post: Jiiva starrer “Varalaru Mukkiyam”

Related Posts

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு Cinema News
சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி Cinema News
பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் 'தடை உடை பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’. Cinema News
நடிகை பாயல் ராஜ்புட் ‘மீ டூ’வில் பாலியல் புகார் Cinema News
இரண்டு வசீகரிக்கும் பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை இரண்டு வசீகரிக்கும் பெண்கள், ஒரு மறக்க முடியாத கதை Cinema News
Thean-Film Review-indiastarsnow.com தேன் திரைவிமர்சனம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme