Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது'அடங்காமை ' திரைப்படம்

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ திரைப்படம்

Posted on December 31, 2021 By admin

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ திரைப்படம்அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது:

2022 ஜனவரியில் வெளியாகிறது !

திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.

தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் 2022 ஜனவரியில் ‘அடங்காமை’ உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன் ஆகியோர்
முக்கியமான பாத்திரங்களை ஏற்றுள்ளார்கள்.

சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத்தோடு வளர்கிறார்கள் .அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன் நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால் உடனிருக்கும் அவர்களால்தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது .அவர்களை எப்படிப் பழிவாங்குவது என்று துடிக்கிறான்?பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தவிக்கிறான்; தயங்குகிறான்; யோசிக்கிறான். ஆனால் இயற்கையோ மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறது.இப்படிப் போகிறது ‘அடங்காமை’ படத்தின் கதை.

படம் பற்றி இயக்குநர் கோபால் பேசும்போது ,

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100க்கு 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து
ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.
. இப்படத்தை டிசம்பர் 31-ல் தமிழகமெங்கும்
வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தோம்.ஆண்டின் இறுதி வாரத்தில் ஏராளமான படங்கள் வருவதால் திரையரங்குகள் கிடைப்பது சரியாக அமையவில்லை.
எனவே நிதானமாகத் திட்டமிடப்பட்டு ஜனவரியில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது.

இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் “என்கிறார் இயக்குநர்.

தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும் டென்மார்க்கில் இருந்து இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் இரண்டு தயாரிப்பாளர்களும்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன்,
நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.

ஜனவரி முதல் ‘அடங்காமை’ திரைகளில்.

Cinema News Tags:அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது'அடங்காமை ' திரைப்படம்

Post navigation

Previous Post: மிர்னா மேனன் வழக்கு தள்ளுபடி ; விஜய் விஷ்வாவிற்கு கிடைத்த நியாய தீர்ப்பு
Next Post: ஓணான் திரைவிமர்சனம்

Related Posts

Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS" Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS” Cinema News
PoojaKumar beautifu picture PoojaKumar beautifu picture Cinema News
ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நாயகிகள் Cinema News
Ranbir Kapoor’s first look as Shiva is fierce and daunting Brahmastra motion poster out Ranbir Kapoor’s first look as Shiva is fierce and daunting Cinema News
பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்...கண்ணு வைக்கும் -www.indiastarsnow.com பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்…கண்ணு வைக்கும் !! Cinema News
புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா-indiastarsnow.com புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme