Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

18 வது சென்னை மாவட்ட, முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்

18 வது சென்னை மாவட்ட, முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்

Posted on December 18, 2021 By admin

18 வது சென்னை மாவட்ட, முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்

சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம், 18 வது சென்னை மாவட்ட முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை 2021 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்துகிறது.

இந்த நிகழ்வு 35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கானது. ஆண்களில் மூத்த விளையாட்டு வீரர் 90+ மற்றும் பெண் 85+ வரை கலந்துகொள்ளலாம். இதில் பங்குபெறும் பெரும்பாலான சென்னை தடகள வீரர்கள், தேசிய அளவிலும், ஆசிய போட்டிகள் மற்றும் உலகப் போட்டிகளில் தமிழ்நாட்ட்இன் சார்பில் விளையாடியுள்ளனர்.

சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத் தலைவர் திரு. M.செண்பகமூர்த்தி, திருமதி சசிகலா (பொருளாளர்) ஆகியோர் விளையாட்டு வீரர்களை வரவேற்று, முதன்மை விருந்தினர்களை கௌரவித்தனர்.

இப்போட்டிகள் 35 முதல் 39 வயது வரை, 40 முதல் 44 வயது வரை, 45 முதல் 49 வயது வரை, 95 வயதுக்கு மேல் (ஒவ்வொரு 5 வயது வித்தியாசத்திற்கும் ஒரு குழு பிரிவ) என போட்டிக்கான குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியினை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர், செயலர் டாக்டர் R.ஆனந்த் குமார் ஐ.ஏ.எஸ்., துவக்கி வைத்தார்.

வெற்றியாளர் விவரங்கள்

பாராட்டுக்குரிய விருது – இன்ஸ்பெக்டர் இ.ராஜேஸ்வரி

75+ ஆண்கள் 5KM நடை – மேஜர் வித்யா சாகர் சித்ரபு

40+ ஆண்கள் ஷாட்புட்

1. தாமரைசெல்வம்
2. டெரெக் ஹட்சன்
3. S.நாராயணன்

35+ ஆண்கள் ஷாட்புட்

1. எஸ்.சந்திரசேகர்
2. பிரதாப் சிங் ராபின்சன்
3. விஜயராகவன். V

35+ பெண்கள் – ஷாட்புட்

1. சங்கீதா மோகன்
2. அமிர்தா ஜாக்குலின் ஏ.எஸ்
3. B.பிரமீனா

70+ பெண்கள் ஷாட்புட்

1. V.ஆனந்தவல்லி
2. பாமா சுதர்சன்

கெளரவ விருந்தினர்கள்

ஸ்ரீ மூர்த்தி R ஐட்ரீம்ஸ் எம்எல்ஏ ராயபுரம்,
ஸ்ரீமதி.A. லதா, செயலாளர் தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் இந்திய தடகள சம்மேளன இணை செயலாளர், மற்றும்
டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம், முதல்வர் ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி, நந்தனம்
திரு. ஜெயமுருகன் தலைவர், SNJ டிஸ்டில்லரீஸ்.
ஸ்ரீ M P சூர்ய பிரகாஷ் சி & எம்டி பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட்.

சிறப்பு விருந்தினர்கள்

நடிகர் அருண் விஜய்
நடிகர் விஷ்ணு விஷால்
நடிகை ஷிவானி நாராயணன்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்கள், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.

சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் உறுப்பினர்கள்:
திரு. எம். செண்பகமூர்த்தி, தலைவர், CDMAA
திருமதி டி ருக்மணி தேவ், செயலாளர், CDMAA
திருமதி பி.சசிகலா, பொருளாளர், CDMAA

Cinema News Tags:18 வது சென்னை மாவட்ட, முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்

Post navigation

Previous Post: S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA
Next Post: 83 திரை திரைவிமர்சனம்

Related Posts

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டம் ஆதரவு தெரிவித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டம் ஆதரவு தெரிவித்து இருக்கிறார் Cinema News
ஹிட்டான பாடல்களும், ஸ்மார்ட்டான பின்னணியிசையும் கலந்த கலவை = சாம் சி. எஸ் பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ் Cinema News
ka-pae-ranasingam-review-indiastarsnow.com Ka Pae Ranasingam Film Review Cinema News
ajith-www.indistarsnow.com அஜித்தின் நேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம் Cinema News
லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா Cinema News
திருமணங்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தலைசிறந்த திருமண தலமாக மகாபலிபுரத்தை மேம்படுத்த 500க்கும் மேற்பட்ட தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme