Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு படம் Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு படம் Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது

Posted on December 17, 2021 By admin

செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன் வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்படம், Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது !

திரையுலகில் சில கூட்டணிகள் ஒன்றாக இணைந்தாலே, படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ப்ளக்பஸ்டர் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விடும். “அன்பறிவு” திரைப்படம் அதற்கொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனலாம். தமிழின் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனம் Sathya Jyothi Films, உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஓடிடி தளம் Disney Plus Hotstar, இன்றைய இளையதலைமுறையின் நாயகனாக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, என இவர்கள் குடும்பத்தில் அனைவரையும் குதூகலப்படுத்தும் அம்சமாக இருந்து வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணியும் இணைந்து, தற்போது “அன்பறிவு” படம் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை அளிக்கவுள்ளார்கள். ஆம் “அன்பறிவு” திரைப்படம் Disney Plus Hotstar தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Disney Plus Hotstar ஏற்கனவே ஹிப் ஹாப் தமிழாவின் முந்தைய வெளியீடான ‘சிவகுமாரின் சபாதம்’ படத்தினை தங்கள் ஸ்ட்ரீமிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது, இப்படம் அனைத்து ரசிகர்களிடத்திலும் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Sathya Jyothi Films செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் கூறியதாவது…
அன்பறிவு திரைப்படத்திற்க்காக Disney Plus Hotstar உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு திரைப்படத்தை மிகச்சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்லும் அவர்களின் திறமை வியக்கதக்கது, இணையற்றது. Disney Plus Hotstar ல் எங்களின் ‘அன்பறிவு’ திரைப்படம் திரையிடப்படுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், Disney Plus இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அற்புதமான பணியினை செய்துள்ளார். இயக்குனர் அஸ்வின் ராம் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார். பெரிய நட்சத்திர நடிகர்கள் அடங்கிய ஒரு குழுவை முதல் முறையாக கையாள்வது, ஒருவருக்கு எளிதான காரியம் அல்ல, ஆனால் அஸ்வின் ராம் இந்த திரைப்படத்தில் அப்பணியை விடாமுயற்சியுடன் அணுகி, அதை சாதித்துள்ளார். இந்த அழகான மற்றும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரத்தை வழங்கியதற்காக கண்டிப்பாக அவர் கொண்டாடப்படுவார். நம் மண் சார்ந்த கலாச்சாரம், குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இந்தப் படத்தை குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி, இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்தும் உள்ளார். பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் E ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அன்பறிவு படத்தை Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார்.

Cinema News Tags:Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது, ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு படம் Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது

Post navigation

Previous Post: Hip Hop Tamizh upcoming Movie ANBARIVU
Next Post: ATHARVAA MURALI upcoming Film TRIGGER

Related Posts

ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு-indiastarsnow.com ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு Cinema News
Maayon honoured at Toronto International Film Festival Cinema News
மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’ இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’ Cinema News
The Gray Man The Gray Man is exclusively coming on Netflix on the 22nd of July Cinema News
சிட்தி " (SIDDY) இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினி போன் செய்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டார் சிட்தி இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு. Cinema News
Dr 56 திரை விமர்சனம் !! Dr 56 திரை விமர்சனம் !! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme