Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம்

ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம்

Posted on December 14, 2021 By admin

இந்தப் படத்தில் கதாநாயகனாக கார்த்திக் மதுசூதன் நடித்துள்ளார். கதாநாயகியாக ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்த ஷ்ரத்தா சிவதாஸ் நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, சனா ஷாலினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை – K.C. பாலசாரங்கன், ஒளிப்பதி – மதன் சுந்தர்ராஜ், சுனில் G.N., படத் தொகுப்பு – சாம் RD.X, பாடல்கள் – அரவிந்த் குமார், கலை இயக்கம் – கார்த்திக் மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர், மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை – கார்த்திக் மதுசூதன் திரைக்கதை, வசனம், இயக்கம் – கார்த்திக் மதுசூதன், சாம் RD.X
இந்தப் படம் பற்றி இயக்குநர் கார்த்திக் மதுசூதன் பேசும்போது, “மனித உணர்வுகளிலேயே மிகப் பெரிய உணர்வு எதுவென்றால் அது காதல் உணர்வுதான். அதற்கு எதிர்மறையானது கோபம்.

18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும். 25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும். இதை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன்.
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் காதலித்து ஒரே வருடத்தில் ‘நீ செய்றது எனக்கு பிடிக்கல..’ ‘நான் பண்றது உனக்கு பிடிக்கல..’ ‘நீ சரி இல்ல… நான் சரியில்ல…’ என்று ஒருவர் மாற்றியொருவர் குற்றம், குறை சொல்கிறார்கள். அடுத்து பிரேக் அப்பாகி காதல் தோல்வி ஏற்படுகிறது.
அந்த எமோஷன்ஸ்தான் இந்தப் படம் முழுவதும் பயணிக்கும். கொஞ்ச நாள் கழித்து முன்னே போய் பார்க்கும்போது எல்லாமே நம்முடைய விதி என்றே தோன்றும்.
லவ் டிராமா, குடும்ப உறவுகளுக்கு இந்தப் படத்தில் அதீத முக்கியத்துவம் இருக்கும். இன்றைய இளைய தலை முறையினருகான படம் இது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடக்கும் கதைக் களம் இது.
சென்னை, பெங்களூர், மற்றும் கூர்க் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தை Anti Valentines day (காதலர் தினமான பிப்ரவரி 14-க்கு பிறகு 7 நாட்கள் வெளிநாடுகளில் கொண்டாடுவார்கள்) அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம்..” என்கிறார் நாயகனும், இயக்குநருமான கார்த்திக்.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தில் இடம் பெறும் ‘ரகசிய காதலனே வா வா’ பாடலும் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Cinema News Tags:ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம்

Post navigation

Previous Post: ஹரீஷ் கல்யாண்-அதுல்யா ரவி புதிய திரைப்படம் துவங்கியது
Next Post: பத்திரிகையாளராக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘பிளட் மணி’ திரைப்படம்

Related Posts

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா Cinema News
International Film And Music Festival 2020-indiastarsnow.com International Film And Music Festival 2020 Cinema News
Vidharth turns detective for a mystery-thriller Cinema News
பிகில் படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி Cinema News
Taapsee-Pannu-indiastarsnow.com டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில் Cinema News
சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் - சமுத்திரகனி சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார் – சமுத்திரகனி Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme