Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

க் திரை விமர்சனம்

க் திரை விமர்சனம்

Posted on December 11, 2021 By admin

கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.

கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் யோகேஷ். புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் முக அசைவுகளை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். இவரது மனைவியாக வரும் அனிகா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரம். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். மிகவும் சிக்கலான கதையை எடுத்து இயக்கியதற்கு பெரிய பாராட்டுகள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வசனங்கள் மற்றும் காட்சிகளை கவனித்தால் மட்டுமே படத்தின் கதை தெளிவாக புரியும் அளவிற்கு எடுத்து இருக்கிறார். சின்ன சின்ன வசனங்களுக்கு கூட இறுதியில் அர்த்தம் கொடுத்து இருக்கிறார்.

Movie Reviews Tags:க் திரை விமர்சனம்

Post navigation

Previous Post: ஆன்டி இண்டியன் திரை விமர்சனம்
Next Post: South Superstar Nayanathara enters Beauty Retail space with a unique

Related Posts

வசந்த முல்லை திரை விமர்சனம் வசந்த முல்லை திரை விமர்சனம் Cinema News
sayyesha-arya-indiastarsnow.com ஆர்யா அசரடிக்கும் மகத்தான மகாமுனி Cinema News
மாறன் திரைவிமர்சனம் மாறன் திரைவிமர்சனம் Movie Reviews
விஜயானந்த் திரை விமர்சனம் !! விஜயானந்த் திரை விமர்சனம் !! Cinema News
ஆன்டி இண்டியன் திரை விமர்சனம் ஆன்டி இண்டியன் திரை விமர்சனம் Movie Reviews
ஓ மை கோஸ்ட் விமர்சனம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme