Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

Posted on December 10, 2021 By admin

புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார்.

ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் இந்த செயல், புஷ்பா குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களின் பாராட்டை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பையும் பெற்றுள்ளது.

“புஷ்பா குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அல்லு அர்ஜுன் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, அவர்களுக்கு தங்கம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க விரும்பினார். தனது எண்ணத்தை உடனடியாக அவர் செயல்படுத்தினார்,” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

Cinema News Tags:புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

Post navigation

Previous Post: மீண்டும் பயமுறுத்த வரும் சிவி 2 – கழுத்து மேல் பேய்
Next Post: Allu Arjun gifts gold coins and Rs 10 lakh to PUSHPA team

Related Posts

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் Cinema News
மக்கள் சேவையில்ராகவா லாரன்ஸ் Cinema News
கல்லூரி மாணவர்களின் உற்சாகத்தோடு ‘ரங்கோலி’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு! கல்லூரி மாணவர்களின் உற்சாகத்தோடு ‘ரங்கோலி’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு! Cinema News
Arun Vijay starrer “Borrder” to hit screens worldwide on October 5, 2022 “பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது Cinema News
V House Production Suresh Kamatchi to release Ameer’s ‘Uyir Thamizhukku’ Cinema News
Kaappaan-indiastarsnow.com காப்பான் வசூலில் சக்கை போடு?? Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme