Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மீண்டும் பயமுறுத்த வரும் சிவி 2 – கழுத்து மேல் பேய்

Posted on December 9, 2021 By admin

மீண்டும் பயமுறுத்த வரும் சிவி 2 – கழுத்து மேல் பேய்

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் சிவி (பாகம்-2) என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள். இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.

காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.  இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

Cinema News Tags:மீண்டும் பயமுறுத்த வரும் சிவி 2 - கழுத்து மேல் பேய்

Post navigation

Previous Post: அறிமுக நாயகன் கார்த்திக் – ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ள வித்தியாசமான லவ் டிராமா ” டூடி “
Next Post: புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன்

Related Posts

ப்ளாக் ஆடமின் ஸ்ட்ரீமிங் ப்ரீமியர் தேதியை மார்ச் 15, 2023 அன்று ப்ளாக் ஆடமின் ஸ்ட்ரீமிங் ப்ரீமியர் தேதியை மார்ச் 15, 2023 அன்று Cinema News
‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு - சிங்கார மதனமோகனா ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு Cinema News
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது Cinema News
கொச்சியிலும் தொடர்ந்த 'கோப்ரா'வின் கொண்டாட்டம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ரசிகர்களின் ஆதரவு Cinema News
புதிய ரொமான்டிக் காமெடி தொடர் மை3 புதிய ரொமான்டிக் காமெடி தொடர் மை3 Cinema News
Viduthalai Part1 Movie Review -indiastarsnow.com விடுதலை பாகம் 1 விமர்சனம்! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme