Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Spider-Man No Way Home

உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முடியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் !

Posted on December 9, 2021 By admin

உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முடியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் !

மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது Spider-Man No Way Home திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது.

மார்வல் திரையுலகத்தில் Spider-Man சூப்பர் ஹீரோவின், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் Spider-Man No Way Home. இப்படத்தில் Tom Holland சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும் அவருக்கு ஜோடியாக Michelle ‘MJ’ பாத்திரத்தில் Zendaya வும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய Doctor Stephen Strange பாத்திரத்தில் Benedict Cumberbatch நடித்துள்ளார். இப்படம் மல்டிவெர்ஸ் எனும் வித்தியாசமான கான்செப்டில் பல உலகங்களை இணைக்கும் கதைக்கருவில் உருவாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன் வந்த Spider-Man பட பாகங்களின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் மீண்டும் வருகிறது. 10 வருடங்களுக்கு முன் ரசிகர்களின் கனவுகளை நிரப்பிய Doctor Otto Octavius, Green Goblin மற்றும் Electro பாத்திரங்கள் மீண்டும் இப்படத்தில் வருவது டிரெய்லரில் உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் மூன்று ஸ்பைடர் மேன் பாத்திரங்கள் வரவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் உலகம் முழுதும் படத்திற்கு வரலாறு காணாத அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் எப்போது டிக்கெட் இணையத்தில் வெளியாகும் என இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் Spider-Man No Way Home படத்திற்கான டிக்கெட் புக்கிங் இணையத்தில் திறக்கப்பட்டது. டிக்கெட் திறக்கப்பட்ட ஒரு சில வினாடி நேரத்திலேயே லட்சக்கணக்கில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தது. மேலும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கிலான ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்ததால், பல இணையதளங்கள் முடங்கியது. பல திரையரங்கு டிக்கெட் புக்கிங் தளங்களும் முடங்கின. அதனை சரிசெய்யும் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரசிகர்களிடம் இப்படத்திற்கு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

Spider-Man No Way Home திரைப்படம் இந்தியா முழுதும் 2021 டிசம்பர் 16 அன்று தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு,மலையாளம் என பலம்ழொழிகளிலும் வெளியாகிறது. இந்தியாவிலும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cinema News Tags:உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முடியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் !

Post navigation

Previous Post: ஆப் கொடுக்கும் ஆச்சரியம்..; அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ சவாரி..
Next Post: Spider-Man No Way Home becomes a sensational headline for crashing theatre websites due to heavy booking

Related Posts

raai-laxmi-indiastarsnow.com நடிகை ராய் லட்சுமி பீச் போட்டோ வைரலாகி வருகிறது Cinema News
18th-chennai-international-film-festival-indiastarsnow.com 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது Cinema News
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “புராஜக்ட் நம்பர் 2” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! Cinema News
’அரியவன்’ திரை விமர்சனம்-indiastarsnow.com ’அரியவன்’ திரை விமர்சனம் Cinema News
actor-varisu-movie-review-indiastarsnow.com வாரிசு திரை விமர்சனம் Cinema News
RAJINIKANTH'S BIRTHDAY WITH THE SCREENING PVR CINEMAS CELEBRATE SUPERSTAR RAJINIKANTH’S BIRTHDAY WITH THE SCREENING OF HIS MOST LOVED ICONIC FILMS Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme