ஒரு தயாரிப்பாளராக நான் எல்லா நேரத்திலும் உறுதியாக நின்றிருக்கிறேன். ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்னர் உங்களால்தான் தோல்வி என்று மற்றொருவரைக் குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய படங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் நான்தான் பொறுப்பு.
புது முயற்சி எடுத்துள்ளோம். அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியாது என வெங்கட் பிரபுவே சில நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், நான் எந்த நேர்காணலிலும் அப்படிச் சொல்லவில்லை. ஏனென்றால், இந்தக் கான்சப்ட் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
இப்போது இந்த ‘மாநாடு’ படத்தை வாங்கிய அனைவருக்குமே லாபம் கிடைத்திருக்கிறது. தியேட்டர் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கிய அனைவருக்குமே லாபம் கிடைத்திருந்தாலும் தயாரிப்பளரான எனக்கு லாபம் இல்லை. அதற்குக் காரணம் சிம்புவின் முந்தைய பட வசூல்.
ரிலீஸிற்குப் பிறகு படம் வெற்றி பெறுவது என்பது வேறு. ரிலீஸிற்கு முன்பு சில விஷயங்கள் உள்ளன. அது எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய படம் வெற்றி அவ்வளவுதான். இதற்கு யாரையும் குறை சொல்லவும் முடியாது.
சிம்புவின் முந்தைய படம் வெற்றி பெற்றிருந்தால் எனக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். என்னுடைய படத்திற்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு இந்த ‘மாநாடு’ படத்தின் வெற்றியினால் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையிலும் எனக்கு மகிழ்ச்சிதான்…” என்றார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.